முதல்வராக விஜய்.. முட்டுக்கட்டை போடும் ஆளுநர்! கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது காங்கிரஸ்!
சென்னை: தவெக ஆட்சி அமைக்க போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவு அளித்திருக்கிறது. இருப்பினும், விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனை கண்டித்து முதல் ஆளாய் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது காங்கிரஸ்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையை பெறவில்லை. எனவே கூட்டணிக்கு மற்ற கட்சிகளை விஜய் நாடி வருகிறார்.

விஜய்க்கு முதல் ஆளாய் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அதிருப்தி குறையாத நிலையில், தற்போது மற்றொரு அதிருப்தியை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது. அதாவது, விஜய்யை பதவியேறக்க ஆளுநர் அனுமதிக்கவில்லை என்று, ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.
தவெக ஆட்சி அமையக் கூடாது என்ற நோக்கத்துடன் பாஜக செயல்படுவதாகவும், அதன் வெளிபாடுதான் ஆளுநரின் செயல் என்றும், எனவே ஆளுநரைக் கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருக்கிறார்.
விஜய்க்கு சப்போர்ட்டாக மொத்த காங்கிரஸும் களமிறங்கியிருக்கிறது. "பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. விஜய்யை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. ஆளுநர் மாளிகை வழியாக பாஜக அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்" என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறியிருக்கிறார்.
அதேபோல, திமுக கூட்டணி கட்சிகளாக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. விஜய்யை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், ஆர்ப்பாட்டம் எதையும் அவர்கள் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் மட்டும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது. காங்கிரஸின் இந்த நடவடிக்கை திமுக தரப்புக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. முதலமைச்சராக உட்காரப்போகிறவர் கூட இவ்வளவு வேகம் காட்டவில்லை. ஆனால், அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறவர்கள் மட்டும் ஓவர் ஸ்பீடாக இருக்கிறார்களே! திமுகவினர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications