தமிழ்நாடு வரும் மோடி.. கருப்பு கொடியுடன் வரவேற்கும் காங்கிரஸ்! இன்று மாநிலம் முழுவதும் போராட்டம்
சென்னை: தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளது.
தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வது, தாக்குவது, வலை, படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை சுட்டுக் கொல்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று அவர்கள் மீண்டும் மீன்பிடிக்க திரும்பிய நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு மீனவர்களுக்கு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கின்றன. மீனவர்கள் சுதந்திரமாக தங்களது தொழிலை செய்ய முடியவில்லை. தமிழ்நாடு மீனவர்களை இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள் குறிவைத்து தாக்குகின்றன. தமிழ்நாடு மீனவர்களின் வலையை இலங்கை கடற்படையினர் கிழிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும், சிறைப்படுத்துவதும் பல ஆண்டு காலமாக தொடர் கதையாகி வருகிறது.
இலங்கை கடற்படையினர் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மோடி அரசு 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை முழுவதுமாக தோல்வி அடைந்து இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இலங்கை அரசு ராமேஸ்வரம் மீனவருக்கு உச்சபட்சமாக 6 மாதம் சிறை தண்டனையை வழங்கி இருக்கிறது.
மோடி தலைமையிலான அரசு தமிழ்நாடு மீனவர்களை முழுவதுமாக கைவிட்டு இருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இதனை கண்டித்து, பிப்ரவரி 27 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் ராமேஸ்வரம் கடலில் இறங்கி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். விவசாயிகளுக்கு எதிராகவும் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டு இருக்கிறது. கூட்டணி தொடர்பாக டெல்லியில் நடைபெற இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க நான் செல்கிறேன். விஜயதரணி 3 முறை எம்எல்ஏவாகும் வாய்ப்பை வழங்கியது காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸில் தேசத்தை பாதுகாப்பவர்கள் இருப்பார்கள். பயந்தவர்கள் வெளியேறுவார்கள். காங்கிரஸ் தேசிய தலைவர் கூடிய விரைவில் தமிழ்நாடு வருவார். பாஜகவை சேர்ந்த தலைவர்கள், பாஜகவின் அமைச்சர்களுக்கு உண்மை பேசவே தெரியாது. பாஜகதான் ஊழல் கட்சி." என்றார்.












Click it and Unblock the Notifications