திமுகவை கிள்ளிவிட்டு.. தவெகவை ஆட்டும் காங்கிரஸ்! ராகுலில் ரைட் ஹேண்ட் போட்ட கொக்கி! பற்றி எரியுதே!
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸ் கட்சியில் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. திமுகவுடன் இதுவரை இணக்கமாக சென்ற செல்வப் பெருந்தகை முதன்முறையாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பேசி இருக்கும் நிலையில் திமுக தலைமையை விமர்சிக்க தொடங்கி இருக்கிறது தேசிய தலைமை. ராகுல் காந்தியின் வலதுகரமாக கருதப்படும் பிரவீன் சக்கரவர்த்தி தமிழகம் உத்திரபிரதேசத்தை விட கடனில் இருப்பதாக கூறியிருப்பது திமுக தலைமையை கொந்தளிக்க வைத்துள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு காங்கிரஸ் தரப்பிலேயே பதிலடி கொடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதே நேரத்தில் தவெக என்ற 2வது கூட்டணி வாய்ப்பு இருப்பதால் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும் வேலையை காங்கிரஸ் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியைச் சுற்றிய அரசியல் சூழல் தற்போது சூடுபிடித்திருக்கிறது. குறிப்பாக, காங்கிரசில் இருந்து "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்" என்ற கோரிக்கை வலுப்பெற தொடங்கியுள்ளது. இதுவரை திமுகவுடன் இணக்கமாக நடந்துவரும் காங்கிரஸ் தரப்பில் இருந்து இத்தகைய கருத்துகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளதால் கூட்டணி அரசியலில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.

திமுக கூட்டணி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நெருக்கமானவர் என்றும் வியூகம் வகுப்பாளராக கருதப்படுபவருமான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டின் கடன் நிலை குறித்து கருத்து வெளியிட்டு, "தமிழகம் உத்தரபிரதேசத்தைவிட அதிக கடனில் உள்ளது" என்று கூறியிருந்தார். இந்த கருத்து திமுக வட்டாரத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான நெருக்கத்தை பாதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரவீன் சக்கரவர்த்தி
இதற்கிடையில், காங்கிரஸ் உள்ளேயே பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுவே, "காங்கிரஸ் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறதா?" என்ற கேள்வியையும் எழச் செய்துள்ளது. மேலும், விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்துடனான கூட்டணி வாய்ப்பை முன்னிலைப்படுத்தி காங்கிரஸ் திமுக மீது அழுத்தம் கொடுக்கிறதே என்ற விமர்சனமும் கிளம்பியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸில் இரண்டு வகை கருத்துகள் மோதிக்கொண்டு வருகின்றன. ஒரு தரப்பு, கடந்த ஒரு தசாப்தமாக வெற்றியைத் தந்த கூட்டணி என்பதால் திமுகவுடனேயே தொடர வேண்டும் எனக் கூறுகிறது.
தவெக கூட்டணி
மற்றொரு தரப்பு, தவெகவுடன் புதிய கூட்டணிக்கு செல்லலாம் என்றும் வலியுறுத்துகிறது. இதன் மூலம் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்றும், கட்சியின் விரிவாக்கத்துக்கு அது உதவும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். தற்போது காங்கிரஸ் வட்டாரத்தில் "கூட்டணி அரசில் ஆட்சிப் பங்கு வேண்டும்" என்ற கோரிக்கை அதிகமாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி விஜயைச் சந்தித்தது கூட தனிப்பட்ட சந்திப்பாக இருந்தாலும், அது அரசியல் ரீதியாக பெரிய பேச்சுக்குக் காரணமாகியுள்ளது.
காங்கிரஸ் - திமுக அதிருப்தி
இதனால் திமுக தலைமையில் அதிருப்தி ஏற்பட்டதாகவும், கூட்டணி குறித்து தெளிவான நிலைப்பாட்டை விளக்க வேண்டுமென காங்கிரஸ் தேசிய தலைமைக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸ் வட்டாரத்தில் சிலர், திமுக உள்ளூர் மட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும், திமுக தலைவர்கள் பலர் தங்களின் அரசியல் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
கூட்டணி பேச்சு
இந்த சூழலில், தவெகவுடன் சேர்ந்தால் 50 முதல் 80 தொகுதிகள் வரை கேட்கலாம் என்றும், அதன்மூலம் அதிக இளைஞர்களை காங்கிரஸில் ஈர்க்க முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுடன் நல்ல உறவு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், காங்கிரஸ் திமுகவுடனேயே கூட்டணியைத் தொடரும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அப்படிச் சேர்ந்தாலும், இந்த முறை அதிக தொகுதிகளை கோரும் திட்டத்துடன் காங்கிரஸ் தேசிய தலைமை செயல்படலாம் என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
2026 தேர்தல்
இதனுடன் சேர்த்து, தமிழக காங்கிரஸின் தமிழக கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் மாற்றப்பட்டு புதிய குழுவை உருவாக்கும் முயற்சியும் பரிசீலனையில் உள்ளது. இந்த விவகாரங்களுடன் சேர்த்து, 2026 கூட்டணி தொடர்பான முடிவும் விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் இருதுருவ அரசியல், 2026 தேர்தலை முன்னிட்டு இன்னும் பல அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு உள்ளது.
-
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா!












Click it and Unblock the Notifications