72 குண்டுகள் முழங்க.. குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் தகனம்.. தலைவர்கள் அஞ்சலி
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையடுத்து அவரது உடலுக்கு மாலை 5 மணிக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

காமராஜரின் தீவிர தொண்டராக குமரி அனந்தன் அறியப்பட்டார். குறிப்பாக தமிழ் மொழிக்காக அவர் எடுத்த முன்னெடுப்புகள் இன்றுவரை நினைவுக்கூறப்படுவதாக இருக்கிறது. ஒரே ஒரு முறைதான் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த 5 ஆண்டு காலத்தில் அவர் தமிழுக்காக ஆற்றிய பங்களிப்புகள் இன்றுவரை தமிழர்களை தலை நிமிர செய்திருக்கிறது என்று அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமைக்காக தீவிரமாக இவர் போராடியுள்ளார். அதற்கான உரிமையை பெற்று தந்திருக்கிறார். அதனால்தான் இன்றும் தமிழக எம்பிக்கள் தமிழில் கேள்வி எழுப்பி பதிலை பெற முடிகிறது. விமானங்களில் தமிழில் அறிவிப்புகள், தபால் நிலையங்களில் தமிழில் படிவங்கள் கிடைக்க வேண்டும் என தமிழ் மொழியின் பரவலான அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடி அதில் வெற்றிக்கண்டவர்தான் குமரி ஆனந்தன்.
வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனையால் போராடி வந்த குமரி அனந்தன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் அவர உயிரிழந்ததாக அறிப்பு வெளியாகியுள்ளது.
குமரி அனந்தனின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அரசியல் தலைவர்கள் குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஸ்டாலின் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு மாலை 5 மணியளிவில் சென்னை வடபழனி ஏவிஎம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. போலீசாரின் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications