அமைச்சர் கேஎன் நேருவிற்கு எதிராக எப்ஐஆர் போடப்படுமா? தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சொன்ன பதில்
சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலைக்கு லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு உள்ளது. இந்த மோசடி தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் ஆலோசித்து வருவதாகத் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த 2024-25 ஆம் ஆண்டுகளில், தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 538 பணியிடங்களை நிரப்புவதில் ஒவ்வொரு பதவிக்கும் நிரப்ப 10 ரூபாய் நோட்டு மூலம் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. டெண்டர் மற்றும் ஒப்பந்தங்களில் 7.5% முதல் 10% வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், மொத்தம் ரூ.1,020 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக 232 பக்க ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில் கேஎன்நேரு உள்ளிட்ட சம்பந்தபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரியிருந்தது. ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், அ.தி.மு.க எம்.பி. இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் ஆதிநாராயணன் ஆகியோர் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்களை சென்டின உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வு விசாரித்தது. கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அன்று அளித்த தீர்ப்பில், "அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியது.
ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை உடனடியாகப் பின்பற்றாததற்காக, லஞ்ச ஒழிப்புத் துறையின் அப்போதைய பொறுப்பு இயக்குநர் ஏ.டி. துரைக்குமாருக்கு எதிராக அதிமுக ராஜ்யசபா எம்பி இன்பத்துரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இன்பதுரை தனது மனுவில், எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்படுவதற்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராகப் பதவி வகித்த துரைக்குமார், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மோசடி மிகவும் தீவிரமான தன்மை கொண்டது என்றும், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் என 2,538 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து ரூ. 25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சமாகப் பெறப்பட்டதாக இன்பத்துரை மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி தனது வாதத்தைத் தொடங்குகையில், எப்.ஐ.ஆர் உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு 10 நாட்களுக்கு மேலாகியும், லஞ்ச ஒழிப்புத் துறை இதுவரை வழக்கைப் பதிவு செய்யவில்லை என்று கூறினார்.
அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், நீதிமன்றத்தில் இருந்த அரசு தலைமை வழக்கறிஞரிடம் மாநில அரசின் பதில் என்ன என்று தலைமை நீதிபதி கேட்டபோது, பொதுவாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராவதில்லை என்று பி.எஸ். ராமன் கூறினார.
மேலும் அவர் கூறுகையில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராவார் என்றும் கூறினார். இருப்பினும், நீதிமன்றம் கேட்டுக் கொண்டதால், லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பாக, 1988-ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A-ன் கீழ் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டுமா என்பது குறித்து அந்த முகமை தன்னிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருதரப்பு ஆரம்பகட்ட வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு மனு குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தது.
-
“திருச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் முதல்வர் ஸ்டாலின்”.. கேஎன் நேரு கொடுத்த அப்டேட்! -
ஆரோவில் நிலம் 350 கோடி.. ஆளுநர் ஆர்.என்.ரவி, பெண் ஐஏஎஸ் அதிகாரி மீது பறந்த புகார்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?














Click it and Unblock the Notifications