கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்.. நீதிபதி கருத்தை நீக்கக் கோரிய 23 வக்கீல்கள் மீது.. அவமதிப்பு புகார்
சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிவித்த கருத்தை நீக்க கோரி நீதிபதி வைத்தியநாதன் முன் முறையிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை உள்ளிட்ட 23 வழக்கறிஞர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி வழக்கறிஞர்கள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்துள்ளனர்.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதாகவும், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தார்.

இதை எதிர்த்து பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிட கூடாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வைகை உள்ளிட்ட 64 வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்திருந்தனர்.
தங்களுடைய சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் தளமாக நீதிமன்றங்களை நீதிபதிகள் பயன்படுத்தி கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்லாமல் நீதிபதி கிருபாகரனும் இதே போன்று வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையில், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கருத்துகளை நீக்க வைகை உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிபதி வைத்தியநாதனிடம் முறையிட்டனர். இதையடுத்து நீதிபதி வைத்தியநாதன் இந்த கருத்துக்களை நீக்கினார்.
வழக்கறிஞர்களின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு செயலாக கருதி வைகை உள்ளிட்ட 23 வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம், வழக்கறிஞர் செளந்தரராஜன் சார்பில் வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, பாபு, அஸ்வதாமன் ஆகியோர் மனு அளித்துள்ளார். இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications