ஐ-க்யூ குறைவா? நான் State Boardல் படித்தவன்! விவாதமான ஸ்டேன்ட்அப் காமெடியனுக்கு மதுரை எஸ்பி பதில்
சென்னை: ஸ்டேட் போர்டில் படித்தால் ஐ-க்யூ குறைவாக இருக்கும் எனும் பொருள்படும் படி பேசி விவாதத்துக்கு உள்ளான ஸ்டேன்ட் அப் காமெடியன் அபிஷேக் குமாருக்கு மதுரை எஸ்பி வருண் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது ‛ஸ்டேன்ட் அப்' காமெடி நிகழ்ச்சிகள் அதிகரித்துள்ளன. அபிஷேக் குமார் என்பவரும் ஸ்டேன்ட் அப் காமெடி செய்து வருகிறார். இவர் தான் செய்யும் ‛ஸ்டேன்ட் அப்' காமெடி தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இவரை இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ஏராளமானவர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது அபிஷேக் குமார் பதிவேற்றிய வீடியோ விவாதப்பொருளாகி உள்ளது.

Renault கம்பெனி விவாதம்
அந்த வீடியோவில் அபிஷேக் குமார், கூட்டத்தில் இருக்கும் பெண் ஒருவரை நோக்கி எங்கு பணி செய்கிறீர்கள்? என கேள்வி கேட்கிறார். அதற்கு அந்த பெண், ‛‛ஐடியில் வேலை செய்கிறேன்'' என்கிறார். இந்த வேளையில் அவர்கள் இடையேயான உரையாடல் என்பது அந்த பெண் பணியாற்றிய முந்தைய நிறுவனமான‛‛Renault''கம்பெனி தொடர்பாக மாறுகிறது.

ஆங்கில உச்சரிப்பால் குழப்பம்
அப்போது Renault என்பதை ஆங்கில உச்சரிப்பின்படி ரெனோ (reh·noh) எனக்கூற வேண்டும். இதனால் அந்த பெண், ரெனோ (reh·noh) எனக்கூறினார். இது புரியாத நிலையில் அபிஷேக் குமார், ‛பரீட்சயமான வார்த்தையாக உள்ளது'' என்று மட்டுமே கூறுகிறார். இந்த வேளையில் Renault நிறுவனத்தை எளிதாக குறிப்பிடும் வகையில் அந்த பெண் ‛கார்' எனக்கூறினார். அப்போது அபிஷேக் குமார் Renault (ரெனோ) என்பதை Renault-tu(ரெனால்டு) என்று உச்சரித்தால் எளிதாக புரியும் என்று தெரிவித்தார்.

ஐ-க்யூ குறைவாக...
மேலும் இந்த தடுமாற்றம் குறித்து அபிஷேக் குமார், தான் ஸ்டேட் போர்ட்டில் படித்ததாகவும், அறிவுத்திறன் (ஐ-க்யூ) குறைவாகவும், ஊமையாக இருந்தது என பொருள்படும்படி கூறினார். அதற்கு அந்த பெண், நானும் அப்படியே என கூறுகிறார். இதையடுத்து அபிஷேக் குமார், ‛‛ஆனால் நீங்கள் அந்த நிறுவனத்தில் நுழைந்த பிறகு உங்கள் உச்சரிப்பு மாறும்விட்டது சரியா'' என கூற அனைவரும் சிரிக்கின்றனர். அதாவது அந்த பெண்ணும் முதலில் ரொனால்டு எனக்கூறிய நிலையில் தான் ரெனோ என நிறுவனத்தின் பெயரை உச்சரிக்க தொடங்கியதை அபிஷேக் குமார் கூறினார்.

விவாதமான வீடியோ
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதாவது அபிஷேக் குமார் ஸ்டேட் போர்ட்டில் படித்தவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக உள்ளதாக தெரிவித்ததாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மதுரை எஸ்பியான வருண் குமார் இந்த விவாதத்தில் இணைந்துள்ளார்.

எஸ்பி எழுப்பிய கேள்வி
பல் மருத்துவம் படித்து ஐபிஎஸ் ஆன வருண் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் அபிஷேக் குமாரை டேக் செய்து, "நான் ஸ்டேட் போர்டில் படித்தேன். நான் CSE 2010ல் அகில இந்திய தரவரிசையில் 3ம் இடம் பெற்றேன். இது அறிவுத்திறன் குறைவானதாக இருக்குமா?'' என கேள்வி எழுப்பி உள்ளது. இவரது இந்த பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டேட் போர்டில் படித்தவர்களுக்கு யாரும் அறிவுத்திறன் குறைந்தவர்கள் இல்லை என்பதை எடுத்துக்கூறும் வகையில் இந்த ட்விட்டை வருண் குமார் ஐபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பின் செய்து முதல் ட்விட்டாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் குமார் விளக்கம்
இருப்பினும் இந்த வீடியோ தொடர்பாக அபிஷேக் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஒருவர், ‛‛ஸ்டேட் போர்ட் வரியை நீக்கி இருக்கலாம். இது வேடிக்கைக்காக தான் நீங்கள் சொன்னீர்கள். இருப்பினும்'' என கூறி இருந்தார். அதற்கு அபிஷேக் குமார், ‛‛இது என்னை பற்றி நானே குறிப்பிட்டது தான். ஒட்டுமொத்த ஸ்டேட் போர்டு மாணவர்கள் பற்றி கூறவில்லை'' என விளக்கம் அளித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications