ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை.. ‘பல்டி’ அடித்த எடப்பாடி டீம்.. அப்போ?.. கோர்ட்டில் பரபர!
கடந்த 10 மாதங்களாக எடப்பாடி தரப்பு கூறி வந்த கருத்தை இன்று நீதிமன்றத்தில் மாற்றிக் கூறியுள்ளனர்.
சென்னை : ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது எனக் கூறிவந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, அந்த பதவிகள் காலாவதி ஆகவில்லை, ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றினோம் என எடப்பாடி தரப்பு தெரிவித்துள்ளது.
இன்று ஐகோர்ட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி என்ற பேச்சுக்கே 2026 வரை இடமில்லை என வாதிட்டது.
ஓபிஎஸ் தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு, அந்த பதவிகள் காலாவதி ஆகவில்லை, ஆனால், ஜூலை 11 பொதுக்குழுவில் அந்த பதவிகளை ரத்து செய்துவிட்டோம் எனக் கூறியிருக்கிறது.

ஓபிஎஸ் அணி வழக்கு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி பெயரில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரே போட்டியின்றி தேர்வாகும் நிலை உள்ளது. இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பின் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் இந்த பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிராக தனித்தனியாக ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு தேர்தலை நடத்த தடை இல்லை என்றும், பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு வரும் வரை முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

விதிகள் திருத்தப்பட்டால்
இந்நிலையில், இன்று அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதிமுகவின் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என்றும், பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் நோக்கத்திற்கு விரோதமானது. ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி. உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல என்று வாதிட்டனர். கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும் என வாதிட்டனர்.

காலாவதி ஆகுமா?
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவி 2026ம் ஆண்டு வரை உள்ள நிலையில், காலாவதியாகிவிட்டதாக எப்படி கூற முடியும்? பொதுச்செயலாளர் பதவிக்காக ஈபிஎஸ்க்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தியுள்ளனர். நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார், வழக்கை வாபஸ் பெறவும் தயார் என்றும் ஓபிஎஸ் அணி தரப்பில் வாதிட்டனர்.

ஈபிஎஸ் தரப்பு வாதம்
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, ஓபிஎஸ் தனக்கென தனியாக கட்சியை நடத்தி வருகிறார். அவர் எங்களை கட்சியை விட்டு நீக்கியுள்ளார், தனியாக நிர்வாகிகளை நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். அந்த பொதுக்குழு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பானது. ஆனால், அந்த நேரத்தில் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் தகராறு செய்து கொண்டிருந்ததால் அவர்கள் டிவி பார்த்திருக்க மாட்டார்கள். பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. பொதுக்குழு முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும் என வாதிட்டனர்.

காலாவதி ஆகவில்லை - ஒப்புதல்
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பதவி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதியாகவில்லை. ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறை கூற முடியாது எனத் தெரிவித்துள்ளது.

சி.வி.சண்முகம்
கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு முடிந்த நிலையில், அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்த ஈபிஎஸ் அணியின் சி.வி.சண்முகம், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்ற பரபரப்பு தகவலை தெரிவித்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த பலரும், பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் பெறவில்லை என்பதால், அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டன என்ற வாதத்தை முன்வைத்து வந்தனர்.

ஒப்புக்கொண்ட எடப்பாடி அணி
இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகவில்லை, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அந்த பதவிகளை ரத்து செய்துவிட்டு பொதுச் செயலாளர் பதவிகளை உருவாக்கினோம் என ஈபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களாக எடப்பாடி தரப்பினர் கூறி வந்த கருத்தை இன்று நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு மாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications