கோரமண்டல் ரயில் விபத்து: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் உள்பட..தமிழக குழு ஒடிசா சென்றடைந்தது
புவனேஷ்வர்: தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் ஒடிசா சென்றடைந்தனர். தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்திற்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - கொல்கத்தாவின் ஷாலிமார் இடையே இயக்கப்படும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்படும். இந்த ரயில் நெற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு வழக்கம் போல் கிளம்பியது.

இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது. அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன.
இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தில் மீது மோதியது. இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்தன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நாட்டையே இந்த ரயில் விபத்து உலுக்கியுள்ளது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்புக்குழுவினருடன் அப்பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்த பயணிகள் விவரங்கள் கிடைக்கவில்லை .
அது குறித்த தகவலையும் சேகரிக்கும் பணியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இன்று ஒடிசா சென்றனர். தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடம் உடன் சென்றனர். மீட்பு பணிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பயணிகளுக்கு தேவையான உதவிகளை இந்த குழு செய்கிறது. விபத்து நடைபெற்ற இடத்திற்கும் நேரடியாக சென்று தமிழகக் குழு பார்வையிடுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications