சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தினசரி பாதிப்பு
சென்னை: கொரோனா தினசரி பாதிப்புகளை பொருத்தவரையில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அதிகமாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்புகளை பொருத்தவரையில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுடன் ஒப்பிட்டு பார்த்தோமேயானால் படிப்படியாக வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,564 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களை பொருத்தவரையில் நேற்று தினசரி பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் 772 ஆக இருந்தது.
இது போல் பல்வேறு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று 540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 583 பேரும், தூத்துக்குடியில் 244 பேரும், திருப்பூரில் 225 பேரும், திருச்சியில் 216 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் நேற்று ஒரே நாளில் 113 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 193 பேரும், தஞ்சையில் 158 பேரும் சேலத்தில் 175 பேரும், கிருஷ்ணகிரியில் 156 பேரும், மதுரையில் 199 பேரும், நாகையில் 157 பேரும் திண்டுக்கல்லில் 112 பேரும், ஈரோட்டில் 153 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications