ஒரே நாளில் 10 குழந்தைகளுக்கு கொரோனா.. மொத்தமாக 121 குழந்தைகள்.. தமிழகத்திற்கு புதிய சிக்கல்!
தமிழகத்தில் கொரோனா காரணமாக இதுவரை 121 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக இதுவரை 121 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2058 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் சென்னையில்தான் அதிகமான நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமாக இதுவரை கொரோனா காரணமாக 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக குழந்தைகள்
தமிழகத்தில் கொரோனா காரணமாக இதுவரை 121 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகமாக உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அதிக அளவில் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் சதவிகித அடிப்படையில் தமிழகத்தில் அதிகமாக குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று என்ன நிலை
தமிழகத்தில் நேற்று முதல் நாள் வரை 111 குழந்தைகளுக்கு கொரோனா இருந்தது. நேற்று மேலும் 10 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்தது. நேற்று இரண்டு ஒரு வயது குழந்தை, இரண்டு 2 வயது குழந்தை, 3 ஐந்து வயது குழந்தை, ஒரு ஏழு மாத குழந்தை உட்பட 10 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டது.

சென்னையில்தான் அதிகம்
தமிழகத்தில் சென்னையில்தான் இப்படி குழந்தைகள் கொரோனா காரணமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சென்னையில் நேற்று மட்டும் 5 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதில் 5 மாத குழந்தை ஒன்றுக்கும் கொரோனா தாக்கியது. தமிழகத்தில் மொத்தம் 1393 ஆண்களுக்கு கொரோனா உள்ளது. அதேபோல் 665 பெண்களுக்கு கொரோனா உள்ளது.

என்ன மாற்றம்
பொதுவாக குழந்தைகளுக்கு, வயது குறைவான நபர்களுக்கு கொரோனா பாதிக்காது என்று தொடக்க காலத்தில் கூறப்பட்டது. இவர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் இவர்களுக்கு கொரோனா பாதிக்காது என்று கூறப்பட்டது. ஆனால் போக போக இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தமிழகத்தில் அதிக அளவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. இப்படி எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள குழந்தைகள் கூட பாதிக்கப்படுவது தமிழகத்திற்கு புதிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications