தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. இதோடு 12 பேர்.. கடைசி நபருக்கு கொரோனா ஏற்பட்டதில் மர்மம்!
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆனது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 370 ஐ தொட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 97 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை கேரளாவில் 92 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இது போக இந்தியாவில் 9 பேர் கொரோனவால் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இப்போதுதான் கொரோனா வேகம் எடுத்துள்ளது .

எண்ணிக்கை கூடியது
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆனது. லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர் புரசைவாக்கத்தை சேர்ந்தவர்.சென்னையை சேர்ந்த இவர் 25 வயது நபர். மேலும் 48 வயது திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கோவையில் உள்ளார்.

மதுரை நபர்
54 வயதை சேர்ந்த இவர் மதுரையில் இருக்கிறார். இவருக்கு வெளிநாடு, வெளி மாநிலம் சென்றவர்களுக்கான அறிகுறி இல்லை. இவருக்கு எப்படி நோய் ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இதை விசாரித்து வருகிறோம். இவருக்கு உடல் நிலை மோசமாக உள்ளது. இது கொஞ்சம் சிக்கலான நோயாளி. ஏனென்றால் இவருக்கு மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி இருக்கிறது.

மோசமாக உள்ள உடல்
அதனால் இவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் 12 ஆயிரம் 519 பேர் வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்னனர்.இவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறோம். மக்களுக்கு தெரிய வேண்டும், வெளி நபர்கள் உள்ளே வர கூடாது என்பதை அறிவிக்க வேண்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறோம். இவர்களிடம் இருந்துதான் வைரஸ் பரவுகிறது.

மிக கண்டிப்பு
இவர்கள் வீட்டில் இருப்பது கட்டாயமானது. விருதுநகரில் ஆயுதப்படை காவலர் ஒருவருக்கு கொரோன அறிகுறி உள்ளது. ஆனால் இதை உறுதி செய்யவில்லை. சோதனைக்காக இவரின் ரத்தம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், கோவையில் பலர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 8 மாவட்டங்களில் காவல் துறை அலெர்ட் செய்யப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications