சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இத்தாலி போல ஆக கூடாது... கொரோனவை தடுக்க இந்த 15 விஷயங்களை தமிழகம் உடனே செய்ய வேண்டும்.. ஆனால்!

இத்தாலி போல தமிழகமும் கொரோனா மூலம் பாதிக்க கூடாது என்றால் உடனே தமிழக அரசு 15 முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Google Oneindia Tamil News

சென்னை: இத்தாலி போல தமிழகமும் கொரோனா மூலம் பாதிக்க கூடாது என்றால் உடனே தமிழக அரசு 15 முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா முதல் முதலில் தாக்கிய சீனாவை விட இத்தாலியில்தான் அதிக பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அங்கு 59,138 பேர் இதனால் பாதிக்கப்ட்டுள்ளனர். 5,476 பேர் கொரோனவால் பலியாகி உள்ளனர்.

இத்தாலியின் மக்கள் தொகை 7 கோடிதான். தமிழகத்தின் மக்கள் தொகையும் ஏறத்தாழ 7 கோடிதான். தமிழகத்தில் கேரளா போலவோ, மகாராஷ்டிரா போலவோ அல்லது இத்தாலி போலவோ ஆகாமல் தடுக்க தமிழக அரசு பின் வரும் விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

என்ன முதலில்

என்ன முதலில்

முதல் விஷயம் கொரோனா தொடர்பாக மருத்துவர்கள், அறிவியலாளர்கள் சொல்வதை கேட்கவேண்டும். டாக்டர் லீ சொன்னதை கேட்டு இருந்தால் இன்று சீனாவில் கொரோனவே பரவி இருக்காது. அதேபோல் தமிழக அரசும் மருத்துவர்கள் கூறும் அறிவுரையை ஏற்று , அரசியல்வாதி , அதிகாரி என்ற திமிர் இல்லாமல் உடனே அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும். அரசியல்வாதிகளை விட மருத்துவர்களுக்குத்தான் கொரோனா குறித்து அதிகமாக தெரியும்.

இரண்டாவது

இரண்டாவது

இரண்டாவது மாவட்டங்களுக்கு இடத்தையே போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். இது கொஞ்சம் கஷ்டம். மூன்றாவது மாவட்டங்களுக்கு உள்ளே போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். இது மிக கஷ்டம். ஆனால் அவசியம். எந்த அச்சமும் இன்று போக்குவரத்தை தடை செய்து மக்களை வீட்டிற்கு உள்ளேயே இருக்க வைக்க வேண்டும். இது மிக மிக அவசியம் . வெளியே சென்றால்தான் கொரோனா பரவும். நாளை முதல் செய்யப்படும் 144 தடை இதற்கு உதவும்.

முக்கியம் என்ன

முக்கியம் என்ன

நான்காவது சோதனை முறைகளை விரிவுபடுத்த வேண்டும். சோதனையை வேகமாக செய்ய வழிகளை மேற்கொள்ள வேண்டும். கேரளாவை விட தமிழகத்தில் சோதனை மெதுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அதிகரிக்க வேண்டும். இத்தாலியில் இதுதான் பிரச்சனை. ஐந்தாவது காய்ச்சல் உடன் அனுமதியாகும் எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். சோதனையை அதிகரிக்க வேண்டும். ஆறாவது அறிகுறி உள்ள எல்லோரையும் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

ஏழாவது தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதற்கு அடுத்து எட்டாவது, நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்களை காண்டாக்ட் டிரேஸ் செய்து தனிமைப்படுத்த வேண்டும்.ஒன்பதாவது, இதற்காக தனி தனி குழுக்களை அமைக்க வேண்டும். ஒரே நபர் பணிகளை செய்ய முடியாது. எல்லோரையும் இதில் ஈடுபடுத்த வேண்டும். 10வது மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். போதிய ஆகிசிஜன் சிலிண்டர்களை தயார் செய்ய வேண்டும். கொரோனா சுவாச பாதிப்பை ஏற்படுத்தும்.

சிறப்பு

சிறப்பு

11வது சில மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வுஹன் மருத்துவமனை போலவே சிறப்பு மருத்துவமனையை உருவாக்கி எல்லோரையும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். 12 வது இளைஞர்களை உதவிக்கு அழைக்க வேண்டும். அரசு பணியாளர்கள் மட்டுமின்றி வாலண்டியகர்களை அழைக்க வேண்டும்.

கடைசி என்ன

கடைசி என்ன

13வது நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை முறைகளை அதிகரிக்க வேண்டும். இதெல்லாம் போக இதற்கு தனியாக மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளை முடுக்க வேண்டும்.வேறு நாட்டில் மருந்து கண்டுபிடிப்பார்கள் என்று அலட்சியமாக இருக்க கூடாது. கடைசியாக கொரோனா தொடர்பான வதந்திகளை கண்டுபிடிக்க தனியாக குழு அமைக்க வேண்டும்.

English summary
Coronavirus: 15 steps Tamilnadu must take against the pandemic, What to do?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X