Coronavirus: இந்த 5 மாவட்ட மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.. சர்ரென அதிகரித்த கேஸ்கள்- என்ன நடக்கிறது?
சென்னை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. ஓமிக்ரான் பரவல் 3ம் நிலையை எட்டியுள்ள நிலையில் தினசரி கொரோனா கேஸ்கள் திடீரென உச்சம் தொட்டுள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 10 ஆயிரத்திற்கும் குறைவாக தினசரி கேஸ்கள் பதிவானது. ஆனால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
வரும் நாட்களில் ஓமிக்ரான் பரவலால் இந்தியாவில் கேஸ்கள் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் அலையை விட மூன்றாம் அலையில் தினசரி கேஸ்கள் மிக அதிகமாக பதிவாகும் என்ற அச்சம் உள்ளது.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டிலும் தினசரி கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 6983 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 22628 ஆக உயர்ந்துள்ளது. இங்கு இதுவரை 2767432 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 36825 பேர் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இங்கு தினசரி கேஸ்கள் 1000க்கும் கீழ் போன மாதம் பதிவாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா உச்சம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சரசரவென அதிகரித்த கொரோனா புதிய உச்சம் தொட்டுள்ளது. திடீரென ஒரே நாளில் 7 ஆயிரம் கேஸ்கள் வரை தமிழ்நாட்டில் பதிவாகி உள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் முன்பே இதை பற்றி எச்சரிக்கை விடுத்து இருந்தார். தமிழ்நாட்டில் ஓமிக்ரான் சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டது. தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டது என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதேபோல் இப்போது கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது.

5 மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் தினசரி கேஸ்கள் கிட்டத்தட்ட 7 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோயம்புத்தூர், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி உள்ளன. சென்னையில் 3759 கேஸ்கள் நேற்று ஒரே நாளில் பதிவாகி உள்ளது. அங்கு மொத்தம் 11494 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

சென்னை
சென்னையில் கேஸ்கள் 3500ஐ தாண்டி உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் செங்கல்பட்டில் 816 கேஸ்கள் நேற்று ஒரே நாளில் பதிவாகி உள்ளது. அங்கு கடந்த மாதம் வரை 100கும் குறைவான கேஸ்கள் பதிவானது. செங்கல்பட்டில் இப்போது 2437 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 444 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு மொத்தம் 1102 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்த 3 மாவட்டங்கள்தான் தமிழ்நாட்டில் கொரோனா அதிகம் பதிவாகும் டாப் மாவட்டங்கள் ஆகும்.

கோவை
அடுத்தபடியாக கோவையில் 309 கொரோனா கேஸ்கள் நேற்று பதிவானது. அங்கு 1305 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளன. கோவையிலும் திடீரென கேஸ்கள் அதிகம் ஆகி உள்ளது. 2ம் அலையில் கோவை மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுபோக எதிர்பார்க்காத வகையில் வேலூரில் 223 கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு 670 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். எனவே அதிக கேஸ்கள் பதிவாகும் இந்த 5 மாவட்ட மக்கள் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications