உணவு கொடுத்து உதவி செய்தார்.. தன்னார்வலர் மூலம் 53 பேருக்கு பரவிய கொரோனா.. ஐஸ் ஹவுசில் நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் தன்னார்வலர் ஒருவர் மூலம் 53 பேருக்கு கொரோனா பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கொரோனா வேகம் குறைவதற்கு பதில் தற்போதுதான் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தினமும் 50 என்று ஏற்பட்டு வந்த கேஸ்கள் கடந்த வாரம் முழுக்க சென்னையில் தினமும் 100 என்ற வேகத்தில் கொரோனா கேஸ்கள் பரவ தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா கேஸ்கள் தினமும் 200 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்தது.

சென்னை ஏரியா?
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக காரணமாக கோயம்பேடு மார்க்கெட் சொல்லப்படுகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் தற்போது தமிழகத்தின் புதிய எபிசென்டராக மாறியுள்ளது. தமிழகம் முழுக்க பலருக்கு கோயம்பேட்டில் இருந்து கொரோனா பரவி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் மட்டும் தற்போது 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு காரணமாக 120 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

செயின் போல பரவுகிறது
சென்னையில் இப்படி கோயம்பேடு காரணமாக பாதிக்கப்படும் பகுதிகளில் திருவல்லிக்கேணியில் ஐஸ் ஹவுஸ் பகுதியும் ஒன்றாகும். அங்கு கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஒரே தெருவில் அங்கு 30 பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தற்போது அதே ஐஸ் ஹவுஸ் பகுதியில் தன்னார்வலர் ஒருவர் மூலம் பலருக்கு கொரோனா பரவியது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர் பரவல்
ஐஸ் ஹவுஸ் பகுதியில் உணவு இன்றி கஷ்டப்படும் மக்களுக்கு தன்னார்வலர் ஒருவர் கடந்த வாரம் உணவு கொடுத்து இருக்கிறார். பல்வேறு தன்னார்வலர்கள் குழுவுடன் இணைந்து இவர் பணிகள் செய்துள்ளார். மிகவும் நல்ல எண்ணத்தில் மக்களுக்கு உணவு, டீ, பிஸ்கெட் போன்றவற்றை வழங்கி உள்ளார். பார்சல்களை சமூக இடைவெளியுடன் மாஸ்க் அணிந்துதான் கொடுத்துள்ளார். ஆனால் இவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இவர் மூலம் பரவியது
இவருக்கு யார் மூலம் கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இவர் வெவ்வேறு தெருக்களில் உணவு கொடுத்துள்ளார். இவர் உணவு கொடுத்த தெருக்களில் எல்லாம் வரிசையாக பலருக்கு கொரோனா பரவி உள்ளது . இதையடுத்து களமிறங்கிய மாநகராட்சி நிர்வாகம் வேகமாக செயல்பட்டு துரிதமாக காண்டாக்ட் டிரேஸ் செய்தது. இவர் யாருக்கு எல்லாம் உணவு கொடுத்தாரோ அவர்கள் எல்லோரும் 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.
Recommended Video

68 பேர்
இந்த டிரேசிங்கின் முடிவில் மொத்தம் 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் தற்போது 53 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 53 பேர் தொடர்பு கொண்ட மற்ற நபர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். சென்னையில் மக்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை தங்கள் உடலை சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டடுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications