95 வயசு தாத்தாவுக்கு மாரடைப்பு.. டெஸ்ட்டில் வந்த ட்விஸ்ட்.. சிக்கலில் சிந்தாதிரிபேட்டை.. சீல் வைப்பு

மாரடைப்பால் இறந்த முதியவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 95 வயது தாத்தா நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக சொல்லி அடக்கமும் அடக்கமும் செய்துவிட்டனர்... ஆனால் 2 நாள் கழித்து, அந்த பெரியவருக்கு கொரோனா பாசிட்டிவ் என செய்தி வந்துள்ளது.. மாரடைப்பு என்று சொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், திடீர் ட்விஸ்ட்டாக இந்த ரிசல்ட் வந்துள்ளது பெரும் பரபரபபை சிந்தாதிரிப்பேட்டையில் ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா... சிக்கலில் சிந்தாதிரிபேட்டை

    சிந்தாதிரிப்பேட்டை வேதகிரியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு டெல்லி போய்விட்டு வந்தார்.. வந்ததும் கொரோனா டெஸ்ட் செய்து கொண்டார்.. 2 முறை டெஸ்ட் செய்து பார்த்ததில் அவருக்கு தொற்று இல்லை என முடிவானது.. இதையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

    இந்நிலையில் 4 நாளைக்கு முன்பு அந்த நபரின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அவருக்கு வயது 95.. உடல்நலக்குறைவால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. ஆனால் கொரோனாவுக்கான சிகிச்சைகள் அங்கு பெருமளவில் நடந்து வருவதால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.

    சளி மாதிரிகள்

    சளி மாதிரிகள்

    அதன்படியே அங்கு முதியவரை அழைத்து சென்றனர்.. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.. எனினும், அவரது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு டெஸ்ட்டுக்கும் அனுப்பப்பட்டது.. பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு அங்கு சொல்லவும், அதன்படியே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. ஆனால் திடீரென வழியிலேயே அந்த தாத்தா உயிர் பிரிந்துவிட்டது. பிறகு கிட்டத்தட்ட 40 பேர் சேர்ந்து, மத சடங்குகள் செய்து அவரை அடக்கம் செய்தனர்.

    டெஸ்ட் முடிவுகள்

    டெஸ்ட் முடிவுகள்

    இந்நிலையில் அன்று எடுக்கப்பட்ட டெஸ்ட் முடிவுகள் அடக்கம் செய்து 2 நாள் ஆன நிலையில் இப்போது வந்தன.. அதில், பெரியவருக்கு இருந்தது உறுதியானது... இதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ந்தனர்.. இதையடுத்து, சிந்தாதிரிப்பேட்டையில் அவர் முதலில் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் சிகிச்சை சான்றிதழை கேட்டு பெற்று அதை போலீஸ் ஸ்டேஷனிலும் தந்துள்ளனர் உறவினர்கள்.. கொரோனா பாதித்தவர் என்று தெரியாமலேயே உடல் அடக்கமும் செய்யப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் கவர்

    பிளாஸ்டிக் கவர்

    இப்படி பாதித்து உயிரிழந்தவர்களை யாரும் தொடக்கூடாது, அருகில் செல்ல கூடாது, உடலை பிளாஸ்டிக் கவரால் உடனே சுற்ற வேண்டும், சடங்குகள் செய்யும்போது பக்கத்தில் போகக்கூடாது என்று மத்திய சுகாதார துறை நிறைய வழிமுறைகளை சொல்லி இருக்கிறது. ஆனால், இவருக்கு இதில் எதுவுமே பின்பற்றப்படவில்லை.

    சீல் வைப்பு

    சீல் வைப்பு

    இறந்தவர் முகத்தைகூட தூரமாக நின்று பார்க்க வேண்டும், தொட்டு அழக்கூடாது, கட்டிப்பிடித்து அழக்கூடாது என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்ட நிலையில், இவை அனைத்துமே சுக்குநூறாக உடைந்துள்ளது.. 40 பேர் எப்படி அடக்கம் செய்தார்களோ உறுதியாக தெரியவில்லை.. அதனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்துள்ளது.. இப்படி ஒரு ரிசல்ட் வந்ததுமே சிந்தாதிரிப்பேட்டை வேதகிரித் தெருவுக்கே மொத்தமாக சீல் வைக்கப்பட்டது. அந்த தெருவில் உள்ள 180 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    தாத்தா வீட்டில் இருக்கும் அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் சடலத்தை ஆம்புலன்ஸில் கொண்டுச் சென்ற டிரைவர்கள், உதவியாளர், மயானத்துக்கு சென்றவர்கள் எல்லாரையுமே தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லிக்கு போய் வந்த மகனை 28 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கவில்லை என்கிறார்கள். ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்ட நிலையில், எதற்காக கொரோனா வார்டு இல்லாத ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்ற பல கேள்விகள் இதில் எழுந்துள்ளன.

    அலட்சியம்

    அலட்சியம்

    பொது சுகாதாரத்துறை இன்னும்கூட கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் என்கிறார்கள் சிலர்... இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் மரணங்களை எந்தவிதத்திலும் ஏற்று கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் சென்னையில் 5 வது மண்டலமான ராயபுரம் மண்டலத்தில் அதிக அளவில் பாதிப்புகள் தற்போது உள்ளன... இதே மண்டலத்தில் தான் சிந்தாதிரிப்பேட்டையும் உள்ளது.. ஏற்கனவே பீதியில் உள்ள சென்னை மக்களுக்கு சிந்தாதிரிப்பேட்டை மரணம் மேலும் கலக்கத்தை தந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+