ஒருமுறை கொரோனா வந்தவர்களுக்கே மீண்டும் கொரோனா வருகிறதா.. தமிழகத்தின் நிலை என்ன? விஜயபாஸ்கர் விளக்கம்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குகிறதா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்குகிறதா என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கொரோனா கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட பின்பும் கூட தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக வாய்ப்பு குறைவு
பொதுவாக உலகம் முழுக்க யாருக்காவது ஒரு வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு மீண்டும் அந்த வைரஸ் தாக்க வாய்ப்புகள் குறைவு. ஒருமுறை ஒருவரை வைரஸ் தாக்கினால், அவர்களுக்கு அந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகி விடும். இதனால் அவர்களுக்கு மீண்டும் அந்த வைரஸ் தாக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு. ஆனால் கொரோனா இப்படி இல்லை. ஒருமுறை கொரோனா தாக்கினால் அவர்களுக்கு மீண்டும் கொரோனா வராது என்று கூற முடியாது.

சீனாவில் மீண்டும் வந்தது
தென்கொரியா மற்றும் சீனாவில் கொரோனா தாக்கிய சிலருக்கு மீண்டும் கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருமுறை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் மீண்டும் அவருக்கு வைரஸ் வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. கொரோனா தாக்கி குணமடைந்த ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கிய வேறு ஒருவரோடு தொடர்பு கொண்டால், அவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

தமிழகம் என்ன நிலை
இதனால் கொரோனா தாக்கி குணமடைந்த நபர்களும் கூட தொடர்ந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களுக்கு கொரோனா மீண்டும் தாக்குகிறதா என்று கேள்வி எழுந்தது. அதாவது ஒருவருக்கு கொரோனா வந்து அவர் குணமடைந்த பின் மீண்டும் அவருக்கு கொரோனா ஏற்படுகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது .

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வருகிறதா
இதற்கு நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்த யாருக்கும் மீண்டும் கொரோனா வரவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட யாருக்கும் மீண்டும் கொரோனா வராதது ஒரு வகையில் நல்ல விஷயம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை தமிழகத்தின் நிலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உறுதியாக கூற முடியாது
ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வராது என்று உறுதியாக சொல்ல முடியாது. இதனால்தான் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களும் வீட்டில் 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கொரோனாவில் குணமடைந்த பின்பும் கூட மக்கள் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications