எய்ட்ஸ் நோயாளியிடமிருந்து பரவியதா "ஓமைக்ரான்" கொரோனா?.. ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்.. பெரும் அச்சம்!
சென்னை; பல்வேறு நாடுகளில் பரவி வரும் B.1.1.529 வகை கொரோனா வைரசுக்கு ஓமைக்ரான் கொரோனா என்று உலக சுகாதார மையம் பெயர் வைத்துள்ளது. இந்த வைரஸ் எப்படி தோன்றி இருக்கலாம் என்ற கேள்விதான் உலகம் முழுக்க எழுந்துள்ளது.
Recommended Video
ஓமைக்ரான் கொரோனா வைரஸ் முதல் முதலாக கடந்த நவம்பர் 11ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் போட்ஸ்வானா நாட்டில் இந்த கொரோனா பரவல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் பரவி வரும் கொரோனா கேஸ்களில் 90 சதவிகித கேஸ்களுக்கு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா மட்டுமின்றி உலகம் முழுக்க வேறு பல நாடுகளுக்கும் இதே ஓமைக்ரான் கொரோனா பரவி உள்ளது. இஸ்ரேல், ஹாங்காங், யுகே, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் எல்லாம் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. ஐரோப்பா நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வேகம்
நவம்பர் தொடக்கத்தில் வெறும் 3 ஓமைக்ரான் கொரோனா கேஸ்கள் மட்டுமே கண்டுபிடடிக்கப்பட்டன. ஆனால் கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 10 நாடுகளுக்கும் மேல் ஓமைக்ரான் கொரோனா பரவி உள்ளது. இதன் மூலம் ஓமைக்ரான் கொரோனா வேகமாக பரவும் திறன் கொண்டது என்பது உறுதியாகி உள்ளது. இது மிக மோசமான வைரஸ் என்று கூறுபாடுவதற்கு காரணம் இதில் ஏற்பட்டு இருக்கும் உருமாற்றங்கள்தான்.

வித்தியாசம்
இந்த B.1.1529 கொஞ்சம் வித்தியாசமானது. இது ஒருமுறை, இரண்டு முறை அல்ல.. மொத்தம் 32முறை உருமாற்றம் அடைந்துள்ளது. அதிக ஆபத்தான டெல்டா வகை கொரோனாவிலேயே வெறும் 8 முறைதான் உருமாற்றம் ஏற்பட்டது. அப்படி என்றால் ஓமைக்ரான் எவ்வளவு ஆபத்தானது என்று யூகிக்ககலாம். ஆல்பா, பீட்டா, மியூ, காமா போன்ற பல்வேறு வகை உருமாறிய வைரஸ்களில் காணப்பட்ட மாற்றம் இதிலும் காணப்படுகிறது. P681H, N679K, N501Y போன்ற உருமாற்றங்கள் இதிலும் உள்ளது.

கலவை
அதாவது பல உருமாறிய கொரோனா வைரஸ்களின் கலவையாக இந்த புதிய B.1.1529 உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பது போக போக ஆராய்ச்சிகளுக்கு பின்புதான் என்று அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் உருமாற்ற எண்ணிக்கை என்பது ஒரு வைரஸ் எவ்வளவு மோசமானது என்று காட்டாது. மாறாக அதிகம் உருமாறிய வைரஸ் அதிக வேக்சினில் இருந்து தப்பிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கலாம்.

பாதிப்பு
ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களை இது அதிகம் பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஏற்கனவே பிற நோய்கள் இருக்கும் ஒரு நபருக்கு கொரோனா வந்து அவர் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரில் உடலில் இந்த புதிய வகை கொரோனா வகை உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது நீண்ட கால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இது உருமாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மியூட்டேஷன்
லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் கணக்கீட்டு உயிரியல் அமைப்புகள் பிரிவின் பேராசிரியர் ஃபிராங்கோயிஸ் பலூக்ஸ் இது பற்றி விடுத்த எச்சரிக்கையில், எச்ஐவி போன்ற நாள்பட்ட நோயாளிக்கு கொரோனா தாக்கி இருக்கும் பட்சத்தில் அவரின் உடலில் இந்த மியூட்டேஷன் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார். எச்ஐவி தாக்கியவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நிலையில், அவரின் உடலில் இது தோன்றி இருக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications