"கொரோனா சர்ஜ்".. சென்னையில் தீயாய் பரவும் வைரஸ்.. மருத்துவமனைகளில் வேக வேகமாக நிரம்பும் படுக்கைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக பரவி வரும் சூழலில், அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கான படுக்கைகளும் வேகமாக நிரம்ப தொடங்கி உள்ளன..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது.. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 3-ந்தேதியில் இருந்து தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் தினசரி பாதிப்பு சராசரியாக 2 ஆயிரம் என்ற வகையில் அதிகரித்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

பாதிப்பு

பாதிப்பு

கடந்த 3-ந்தேதி தினசரி கேஸ்கள் 876 ஆக இருந்தது... இதற்கு பிறகு 4-ந்தேதி 1489 ஆக அதிகரித்தது.. 5-ந்தேதி 2481, 6-ந்தேதி 3759, 7-ந்தேதி 4531, 8-ம் தேதி 5098 ஆகவும் கேஸ்கள் பதிவாகியிருந்தது... நேற்றைய தினம், அதாவது 9-ம் தேதி 6189 ஆக கொரோனா தொற்று கேஸ்கள் உயர்ந்துள்ளது... இது நேற்று முன்தினம் பாதிப்பை விட 21.4 சதவீதம் அதிகமாகும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1512 பேரும், திருவள்ளூரில் 702 பேரும், காஞ்சிபுரத்தில் 343 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்...

நோயாளிகள்

நோயாளிகள்

இதனிடையே, சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாக 2 நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இதை பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் சொன்னதாவது: "சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி இல்லாமலேயே தொற்று ஏற்பட்டுள்ளது.

அறிகுறி

அறிகுறி

எனவே, அவர்கள் அனைவரும் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர். தொற்று அறிகுறி உள்ளவர்கள், மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளன... ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 700 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

கீழ்ப்பாக்கம்

கீழ்ப்பாக்கம்

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 290-க்கும் மேற்பட்டவர்களும், ஸ்டான்லி மருத்துவமனையில் 188 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 141 பேரும், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் 280 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 115 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 7 சதவீத நோயாளிகள் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று கூறியிருந்தார்.

படுக்கைகள்

படுக்கைகள்

இந்நிலையில், படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..
சென்னையில் கடந்த மே மாதம் தொற்று உச்சத்தில் இருந்தது.. அப்போது 2-ம் அலை பரவல் பாதிப்பில் தமிழகம் சிக்கி கொண்டது.. அந்த சமயத்தில் 66 சதவீதத்திற்கு படுக்கைகள் நிரம்பி இருந்தன.. ஆனால், இப்போது 18.3 சதவீதம் படுக்கைகள் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது..

சிகிச்சை

சிகிச்சை

கடந்த மே மாதம் எடுத்துக் கொண்டால், தினசரி கொரோனா கேஸ்கள் 5829 ஆகி இருந்தது.. 31,475 பேர் அப்போது சிகிச்சை பெற்று வந்தனர்.. அதனால் 66 சதவீதம் படுக்கைகள் நிரம்பியிருந்தன. ஆனால், நேற்றைய தேதி அதாவது ஜனவரி 9-ம் தேதியை ஒப்பிட்டு பார்த்தால், தினசரி 6186 கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன.. 25,798 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.. 3-ம் அலை பரவல் என்று சொல்லப்படும் இந்த சமயத்தில், 18.3 சதவீதம் படுக்கைகள் நிரம்பி காணப்படுகின்றன..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+