சென்னையில் அதிகரிக்கும் கேஸ்கள்.. உள்மாவட்டங்களிலும் வேகம் எடுக்கிறது கொரோனா.. இன்றைய நிலவரம்!
சென்னை: தமிழகத்தில் சென்னையிலும் பல்வேறு உள்மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 391303 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 6988 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 3,32,454 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட நிலவரம்
மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பும் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம் பின்வருமாறு: அரியலூர் - 54, குமரி - 155,கரூர் - 34, ஈரோடு - 143, க.குறிச்சி - 51, விழுப்புரம்-185, விருதுநகர் -97, நாகை - 149, நாமக்கல் - 57, நீலகிரி-79, பெரம்பலூர்-22, புதுக்கோட்டை-116, ராமநாதபுரம்-69, ராணிப்பேட்டை-196, தி.மலை-102, பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை எப்படி
மேலும், சிவகங்கை-43, தென்காசி-86, தஞ்சை-74, திருப்பத்தூர்-40, திருவாரூர்-59, தூத்துக்குடி-60, திருப்பூர்-44, திருச்சி-106, வேலூர்-136, கிருஷ்ணகிரி - 44, மதுரை - 80, கடலூர் - 370, தர்மபுரி - 8, திண்டுக்கல் - 126 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் எப்படி
காஞ்சிபுரத்தில் 214 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 15960 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 321 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 24129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் 297 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 8511 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை நிலைமை
நெல்லையில் 204 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 8770 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 305 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 23062 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனியில் 226 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 11864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 322 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 12467 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications