இதுதான் சரியான தருணம்.. டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.. மகளிர் ஆயம் கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் சாராயக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மகளிர் ஆயம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா ஊரடங்கால், தமிழ்நாட்டில் டாஸ்மாக் சாராயக் கடைகள் கடந்த மார்சு மாதம் 27-ஆம் தேதியிலிருந்து ஒரு மாதமாக மூடிக்கிடக்கின்றன.

இந்த நிலையில் மதுவிலக்கு தொடர்பாக மகளிர் ஆயத்தின் தலைவர் ம.இலட்சுமி வெளியிட்டுள்ள செய்தியாளர் குறிப்பில், அன்றாடம் குடித்துப் பழகிப் போனவர்கள் 90 விழுக்காட்டினர் ஒரு மாதமாகக் குடிக்க வழியில்லாமல், குடிக்காமல் இருந்து பழகிவிட்டார்கள். குடிகாரர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே தவறான வழிகளில் சாராயத்திற்கு மாற்றாக வேறு தயாரிப்புகளைக் குடித்திருப்பார்கள்.
டாஸ்மாக் கடைகள் திறந்திருந்த போது, பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடித்துச் சீரழிந்தார்கள். அவர்களும் இப்போது 1 மாதமாக குடிக்கவில்லை. எனவே இது தக்க தருணம், முழு மது விலக்கைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டில் சாராயக் கடைகளை நிரந்தரமாக மூடிவிடுமாறு தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் பிரிவான மகளிர் ஆயம் கேட்டுக் கொள்கிறது.
மற்ற மாநிலங்களில், மற்ற நாடுகளில் மதுக்கடைகள் திறந்திருக்கின்றனவே என்று ஆட்சியாளர்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். நம் தமிழ்நாட்டிற்கு சாராயக் கடைகள் திறந்திருப்பது பேரழிவாய் ஆகிவிட்டதை நடைமுறையில் பார்த்து விட்டோம்!
தமிழ்நாடு அரசு தனது வருமானத்திற்காக சாராய வணிகம் செய்வதைக் கைவிட்டு அதை ஈடுகட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதற்குமான பால் கொள்முதல் பால் விற்பனை போன்றவற்றைத் தமிழ்நாடு அரசே மேற்கொண்டால் அதன் வழியாக ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும்.
இப்போது தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டின் மொத்த விற்பனையில் 20 விழுக்காடு மட்டுமே விற்கிறது. இதன் வழியாக ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டுகிறது.
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடும்படித் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் வகையில் நாளை
(28.04.2020) ஒவ்வொருவரும் #டாஸ்மாக்மதுக்கடைகளைத்திறக்காதே #DontOpenTASMACShops #மதுஆலைகளைத்திறக்காதே #DontOpenLiquorDistilleries குறிச் சொற்களை (ஹேஷ்டாக்) பதிவு செய்து சாராய ஒழிப்பு அறப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மகளிர் ஆயம் சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்., என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications