ஒரே நாளில் 4 பேர் பலி.. சென்னையை உலுக்கிய கொரோனா.. அடுத்தடுத்து எப்படி நடந்தது.. முக்கிய ஒற்றுமை!
தமிழகத்தில் கொரோனா இன்று காரணமாக சென்னையில் மட்டும் அடுத்தடுத்து 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக இன்று சென்னையில் மட்டும் அடுத்தடுத்து 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் நான்கு பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 பேர் பலியனார்கள். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,409ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 580 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
இன்று தமிழகத்தில் கோயம்பட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர், ராயப்பேட்டை, கோயம்பேடு, சூளைமேடு பகுதிகளில் இருந்து தலா ஒரு மூதாட்டி என்று 3 மூதாட்டிகள் பாலியனார்கள். இவர்கள் நான்கு பேரும் அடுத்தடுத்து பலியானது குறிப்பிடத்தக்கது.

வயது காரணம்
இந்த நிலையில் இவர்கள் நான்கு பேருக்கும் இடையில் நிறைய ஒற்றுமை உள்ளது. இவர்கள் நால்வரும் மிகவும் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பலியாக மிக முக்கியமான காரணம் இவர்களின் வயதுதான் என்று கூறப்பட்டுள்ளது.
- கோயம்பேடு வியாபாரி ஒருவர் அதிகாலையில் பலியானார் - இவருக்கு வயது 60
- கோயம்பேட்டை சேர்ந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார் - இவருக்கு வயது 80
- சூளைமேட்டை சேர்ந்த மூதாட்டி இன்று காலை பலியானார் - இவருக்கு வயது 80
- சென்னையில் கொரோனா பாதிப்புக்கு ராயப்பேட்டை மூதாட்டி பலியாகி உள்ளார் - இவருக்கு வயது 72

என்ன ஒற்றுமை
அதேபோல் கோயம்பேட்டை சேர்ந்த மூதாட்டி மற்றும் சூளைமேட்டை சேர்ந்த மூதாட்டி இருவருக்கும் சிறுநீரக பிரச்சனை இருந்துள்ளது. இதனால் இவர்களின் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அதேபோல் கோயம்பேடு வியாபாரி மற்றும் ராயப்பேட்டை மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இவர்களின் உடல்நிலை மோசமானதற்கு இந்த ரத்த அழுத்தமும் காரணம் ஆகும்.

கடைசி நேரத்தில் மோசமானது
அதேபோல் இதில் கோயம்பேடு ஊழியர் மற்றும் சூளைமேடு மூதாட்டி இருவரும் கடந்த 5 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அவர்களின் உடல்நிலை நன்றாகவே தொடக்கத்தில் இருந்தது. ஆனால் திடீரென்று உடல்நிலை மோசமாகி அவர்கள் பலியாகி உள்ளனர். திடீர் என்று நேற்று இரவு அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. உடல் தொடர்ந்து நலிவடைந்து கொண்டே சென்றுள்ளது .பின் பலியாகி உள்ளனர்.

உடல்நிலை எப்படி
ராயப்பேட்டை மற்றும் கோயம்பேடு மூதாட்டி இருவரும் மிகவும் மோசமான உடல்நிலையுடன்தான் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர்கள் மருத்துவமனை வரும்போதே மோசமான உடல்நிலையில் இருந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு சரியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. கோயம்பேடு ஊழியர் மற்றும் கோயம்பேடு மூதாட்டி இரண்டு பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சூளைமேட்டை மூதாட்டி மட்டும் கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ராயப்பேட்டை மூதாட்டி திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சோகம் என்ன
ராயப்பேட்டை மூதாட்டியின் வீட்டில் இன்னும் 5 பேருக்கு கொரோனா உள்ளது. அதில் வயதான தாத்தா ஒருவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது. அவர்களுக்கு கடந்த இரண்டு வாரம் முன்பே கொரோனா வந்துள்ளது. ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ் தீவிரமாக கொரோனா பரவிய சமயத்தில் இவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கான சோர்ஸ் முறையாக கண்டறியப்படவில்லை.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications