Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் முடிவு.. லேட்டானாலும் இதுதான் சரி.. இப்படித்தான் தடை போடணும்.. முதல்வர் போட்ட 144..!!

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவைரஸ் பரவல் தொடர்பாக மக்கள் படு அலட்சியமாக இருக்கிறார்கள். அதன் தீவிரத்தை பலரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை... இந்த நிலையில் அதிரடியான உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார்... இது வரவேற்புக்குரியது!!

Recommended Video

    ஒரே ஆறுதல்... தமிழ்நாட்டில் இன்னும் ஸ்டேஜ் 1 தான்

    உயிர்கொல்லி நோயான கொரோனாவைரஸ் பரவல் படு வேகமாக இருக்கிறது. இதன் தாக்கம் வீரியம் இவற்றைக் கருத்தில் கொண்டுதான் சோசியல் டிஸ்டன்சிங் குறித்து பரவலாக போதிக்கப்பட்டு வருகிறது. அதை பின்பற்றவும் சொல்லி வருகின்றனர். வலியுறுத்தியும் வருகின்றனர்.

    இதன் ஒரு முகமாகத்தான் நேற்று மக்கள் ஊரடங்கு என்ற ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். உண்மையிலேயே இந்த ஊரடங்கு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். காரணம் மக்கள் மொத்தமாக வீட்டுக்குள் இருந்தால் மட்டுமே இந்த நோய் பரவுவதை தடுக்க முடியும்!!

    விவகாரம்

    விவகாரம்

    ஆனால் நேற்று நடந்த ஊரடங்கு விவகாரத்தை நம் மக்கள் ஏதோ பாரத் பந்த் போல எடுத்துக் கொண்டு விட்டனர். அது முடிந்ததும் வழக்கம் போல வெளியில் வந்து நடமாட ஆரம்பித்து விட்டனர். மொத்தமாக வரக் கூடாது, வெளியில் போகக் கூடாது என்று கூறியும் கூட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் பாஜக கட்சியினர் பலர் பல ஊர்களில் ஊர்வலம் போயுள்ளனர். இதுதான் கொடுமையானது.

    இயல்பு நிலை

    இயல்பு நிலை

    அதேபோலத்தான் சாதாரண மக்களும் கூட இந்த தனிமைப்படுத்தலின் முக்கியத்துவத்தை, அவசியத்தை, அவசரத்தை உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை. மாறாக இயல்பான முறையில் வெளியில் நடமாடி கொண்டுள்ளனர். கேஷூவலாக வெளியூர்களுக்கும் போகிறார்கள்... திருமணம் போன்றவையும் கூட நடத்துகிறார்கள்.. இதெல்லாம் மிகப் பெரும் அபாயகரமானது. உடனடியாக இவைகள் தடுக்கப்பட வேண்டும்.

    மளிகை கடை

    மளிகை கடை

    இந்த நிலையில்தான் தமிழக அரசு அதிரடியாக இன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதுதான் இந்த 144 தடை உத்தரவு. இதன்படி மக்கள் கூட்டமாக கூட முடியாது. கூட்டமாக எங்கும் போக முடியாது. பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் மூடப்படும். சாதாரண மளிக்கடை, காய்கறிக் கடை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மற்றும் பிற ஹோட்டல்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்றவை எல்லாம் மூடப்படும்.

    தற்போதைய நிலை

    தற்போதைய நிலை

    அதேபோல ரயில்கள் கிடையாது, பஸ்களும் ஓடாது. மொத்தமாக எல்லாமே முடக்கப்படும். இதுதான் சரியான நடவடிக்கை. இதுதான் தற்போதைய தேவையும் கூட அவசரமும் கூட. இதனால் மக்களின் நடமாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படும். அப்போதுதான் ஒருவர் மூலமாக இன்னொருவருக்கு அல்லது மொத்தமாக குரூப் டூ குரூப்பாக பரவுவது தடுக்கப்படும். இது தேவையான நடவடிக்கைதான். இது சரியானதும் கூட... இதற்காக முதல்வரை பாராட்ட வேண்டும்.. நாம் அனைவரும் அவரது உத்தரவுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    அதிரடி உத்தரவு

    அதிரடி உத்தரவு

    இந்த விஷயத்தில் புதுச்சேரி முதல்வரை பாராட்டலாம்... காரணம் அவர் மார்ச் 31ம் தேதி ஊரடங்கே போட்டு விட்டார்... தமிழகத்திலும்கூட அதை பின்பற்றலாம். ஏனென்றால், மக்களுக்கு சில விஷயங்களை சாதாரணமாக சொன்னால் புரிவதில்லை அல்லது கேட்க மாட்டார்கள். இதுபோன்ற அபாயகரமான சூழலில் மக்களை கட்டுப்படுத்துவது மிக மிக முக்கியம். அதற்கு சில கடுமையான நடவடிக்கைகள் அவசியம்தான்.

    ஒத்துழைக்க வேண்டும்

    ஒத்துழைக்க வேண்டும்

    அதேசமயம், இந்த நடவடிக்கைகளால் மக்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக் கூடாது. காரணம் கூலித் தொழிலாளர்கள், அன்றாடம் வேலை பார்த்து சம்பாதிப்போர், ஏழைகளுக்கு இதனால் பாதிப்பு அதிகம் வரும்... அவர்களுக்கும் அரசு ஏதாவது நலத் திட்டத்தை கொண்டு வந்து செய்ய வேண்டும்.. எப்படியோ இந்த கொரோனாவை ஒழிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்ய வேண்டும்... அதேபோல மக்களும் அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்!!!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+