இதில் பாதி "அந்த ஒரு இடத்திலிருந்து" வந்தவர்கள்.. மீதி பேர்? சரமாரி கேள்வி.. எச்.ராஜா பதில் இதுதான்!

ட்விட்டர்வாசி எழுப்பிய கேள்விக்கு எச்.ராஜா பதிலளித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ராஜா சார், இந்த கேள்வியை கேட்க கரெக்ட் ஆன நபர் நீங்க தான்... 6095 பேரில் 738 பேர்... இதில் பாதி அந்த ஒரு இடத்திலிருந்து வந்தவர்கள்... மாநிலத்தில் இருக்கும் மற்ற மக்களின் நிலை என்ன?" என்று ட்விட்டர்வாசி ஒருவர் எச்.ராஜாவிடம் சந்தேகம் எழுப்பினார். அதற்கு எச்.ராஜா லிஸ்ட் போட்டு கணக்கு சொல்லி பதிலளித்துள்ளார்.

இந்தியாவுக்குள் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.. தமிழகத்தில் இந்த தொற்றுக்கு பாதிப்பு தினம் தினம் கூடியும் வருகிறது.

நேற்று முன்தின நிலவரப்படி தொற்றுக்கு 738 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தியும் வருகிறது. தமிழகத்தில் இப்படி திடீரென தொற்று ஏற்பட காரணம், டெல்லி மாநாடு என்பதும், அதில் பங்கேற்றவர்களால்தான் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்றும் ஒருசாரார் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

மதரீதியான விமர்சனங்களும், கருத்துக்களும் வெளியிட்டபடி உள்ளனர்.. இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், ஒரு இடத்திலிருந்து வந்தவர்கள் என்று மறைமுகமாகவும், நேரடியாகவும் குறிப்பிட்டும் வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாகூட, இதை பற்றி ட்வீட் போட்டிருந்தார்.. சிகிச்சை தரும் டாக்டர்களை மீது எச்சில் துப்பலாமா, அசிங்கமாக பேசலாமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

சந்தேகம்

சந்தேகம்

இந்நிலையில், ட்விட்டர்வாசி ஒருவர் எச்.ராஜாவிடம் ஒரு சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.. அதில்,
"ராஜா சார், இந்த கேள்வியை கேட்க சரியான நபர் நீங்க தான்... 6095 பேரில் 738 பேர்... இதில் பாதி அந்த ஒரு இடத்திலிருந்து வந்தவர்கள்... மாநிலத்தில் இருக்கும் மற்ற மக்களின் நிலை என்ன?" என்று கேட்டார்.

3வது கட்டம்

3வது கட்டம்

பொதுவாக, யார் என்ன மாதிரியான சந்தேகங்கள், கேள்வி கேட்டாலும் அதற்கு எச்.ராஜா பதிலளிப்பது வழக்கம்.. அந்த வகையில் இதற்கும் பதிலளித்துள்ளார்.. "738-ல், 678 பேர் அந்த ஒரு இடத்தை சேர்ந்தவர்கள்... மீதியிருக்கும் 60 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டு தொடர்பில்லாத யாருக்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை... அப்படி ஒருவர் கண்டறியப்பட்டாலும் அது ஆபத்து... அதுதான் 3-வது கட்டம் என்ற சொல்வார்கள்' என்று பதிலளித்துள்ளார்.

கோவை

கோவை

இதற்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன... "Mr.H.Raja அவர்களே.. கோவையில் உள்ள யோகா மையத்தில் வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளனர்,சென்னைக்கு அடுத்து கோவை கொரோனா தொற்று அதிகம் உள்ள இடம்.இது குறித்து உங்கள் கருத்து என்ன ஏன் கோவையில் அதிக தொற்று ஒரு வேலை யோகா மையம் மூலமாக கொரோனபரவி இருக்குமோ கொஞ்சம் விளக்கவும்" என்று இன்னொருத்தர் சந்தேகம் கேட்டுள்ளார்.

ஆவண செய்யுங்கள்

ஆவண செய்யுங்கள்

மற்றொருவரோ, "உண்மை ஐயா, இந்த தகவலை ஊடகங்கள் மொத்தமாக மறைக்கின்றனர். உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள உரிமையுண்டு. நீங்கள் உண்மையை சொல்லுவதற்கு நன்றி. ஆனால், உண்மையை மறைக்கும் எல்லா ஊடகங்களை உண்மையை சொல்லவைப்பது எப்படி என்று ஆவண செய்யுங்கள் ஐயா. நன்றி" என்றும் பாராட்டி உள்ளார். "என்ன ராஜா சார் நீங்களும் ஒரே இடம், ஒரே மிட்டிங், அதே இடம், single source ஆரம்பிச்சிடிங்க, இருக்கிர ஒரே பிடிப்பு நீங்கதான் சார் என்றும் "மத அரசியல் ரொம்ப நாளைக்கு உனக்கு கை கொடுக்காது ராசா" என்றும்கூட கமெண்ட்கள் விழுந்து வருகின்றன!

மற்றொருவரோ, "உண்மை ஐயா, இந்த தகவலை ஊடகங்கள் மொத்தமாக மறைக்கின்றனர். உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள உரிமையுண்டு. நீங்கள் உண்மையை சொல்லுவதற்கு நன்றி. ஆனால், உண்மையை மறைக்கும் எல்லா ஊடகங்களை உண்மையை சொல்லவைப்பது எப்படி என்று ஆவண செய்யுங்கள் ஐயா. நன்றி" என்றும் பாராட்டி உள்ளார். "என்ன ராஜா சார் நீங்களும் ஒரே இடம், ஒரே மிட்டிங், அதே இடம், single source ஆரம்பிச்சிடிங்க, இருக்கிர ஒரே பிடிப்பு நீங்கதான் சார் என்றும் "மத அரசியல் ரொம்ப நாளைக்கு உனக்கு கை கொடுக்காது ராசா" என்றும்கூட கமெண்ட்கள் விழுந்து வருகின்றன!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+