தீவிரம் அடைகிறது.. சென்னையில் இன்று ஒரு மருத்துவர் பலி.. ஒரே நாளில் 4 மருத்துவர்களுக்கு கொரோனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    சென்னையில் அதிகரித்த கொரோனா... என்ன நடந்தது?

    தமிழகத்தில் கொரோனா காரணமாக இதுவரை 15 பேர் பலியாகி உள்ளனர். இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது

    இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுக்க கொரோனா காரணமாக 16,960 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னையில் ஒருவர் பலியானார்

    சென்னையில் ஒருவர் பலியானார்

    இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் நரம்பியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்போடு இவர் அனுமதிக்கப்பட்டார்.

    யார் இவர்?

    யார் இவர்?

    தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் நிர்வாக இயக்குநராக இருந்தவர். இவரின் மரணம் தமிழகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீவிரமாக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பலியானார். தமிழகத்தில் இன்று மட்டும் 3 மருத்துவர்கள், 2 பத்திரிகையாளர்கள், 2 காவல்துறையினர் என 7 முக்கியமான துறைகளை சேர்ந்த நபர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் எத்தனை பேர்

    மொத்தம் எத்தனை பேர்

    சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 மருத்துவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 16 மருத்துவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    புகார் உள்ளது

    புகார் உள்ளது

    இது போக 5 மருத்துவ ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் தமிழக அரசு மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தில் மருத்துவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்ற புகார் உள்ளது. போதுமான பாதுகாப்பு உடைகள், கிளவுஸ்கள் இல்லை என்று புகார் உள்ளது. இந்த நிலையில் மருத்துவர் ஒருவரின் மரணம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+