அந்த கொரோனா கிளஸ்டர்.. தமிழகத்தில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. திடீரென இத்தனை கேஸ்கள் வர இதுதான் காரணம்
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் அதிகமாக கேஸ்கள் வர என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று மிக அதிகமாக 817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 18545 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 558 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12198 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது.

காரணம் என்ன
இந்த நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் அதிகமாக கேஸ்கள் வர என்ன காரணம் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தினமும் 600-700 கேஸ்கள் தான் வந்தது. ஒரு நாளுக்கு அதிகமாக 700 கேஸ்கள் மட்டுமே சராசரியாக வந்தது. நேற்று கூட தமிழகத்தில் 624 கேஸ்கள்தான் வந்தது. ஆனால் இன்று தமிழகத்தில் கேஸ்கள் அதிகம் ஆகியுள்ளது. இன்று தமிழகத்தில் 817 கேஸ்கள் வந்துள்ளது.

நேற்று குறைவு
நேற்று தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் குறைவான சோதனை செய்யப்பட்டது. இதனால் நேற்று குறைவான கேஸ்கள் வந்தது என்று கூறப்பட்டது. தமிழகத்தில் இன்று குறைவான கொரோனா சோதனைகள்தான் செய்யப்பட்டது. 10661 பேருக்கு மட்டுமே இன்று சோதனைகள் செய்யப்பட்டது. ஆனாலும் கூட இன்று கொரோனா கேஸ்கள் அதிகம் வந்துள்ளது.

மகாராஷ்டிரா கிளஸ்டர் காரணம்
இதற்கு காரணமாக மகாராஷ்டிரா கிளஸ்டர் என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த நபர்கள் மூலம்தான் இன்று தமிழகத்தில் அதிகமாக கேஸ்கள் வந்துள்ளது. இன்று மொத்தம் 139 கேஸ்கள் வெளி மாநிலத்தில் இருந்து வந்த கேஸ்கள். இதில் 138 கேஸ்கள் மகாராஷ்டிராவில் இருந்து வந்த கேஸ்கள் ஆகும். ஒரே ஒரு கேஸ் கேரளாவில் இருந்து வந்த கேஸ்கள் ஆகும்.

அதிகம் வருகிறது
இந்த மகாராஷ்டிரா கிளஸ்டர்தான் இப்படி அதிக கேஸ்கள் வர காரணம் ஆகும். இதை கழித்துவிட்டு பார்த்தால் தமிழகத்தில் இன்று உள்ளுக்குள்ளேயே ஏற்பட்ட கேஸ்கள் 678 தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இப்படி வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்கள் மூலம் தினமும் கேஸ்கள் அதிகமாக வருகிறது. இன்று அதில் மிக அதிகமாக வந்துள்ளது. இதுதான் 817 என்ற எண்ணிக்கையை இன்று தமிழகம் தொட காரணம்.
Recommended Video

நல்ல செய்தி என்ன?
ஆனால் இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இவர்கள் மூலம் தமிழகத்தில் வேறு யாருக்கும் கொரோனா பரவாது. ஏனென்றால் இவர்கள் எல்லோரும் செக் போஸ்டில் சோதனை செய்யப்படும் நபர்கள். செக் போஸ்டிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதனால் இவர்கள் மூலம் ஊருக்கு உள்ளே கொரோனா செல்வது இல்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications