3 மாதமாக ஆராய்ச்சி செய்கிறோம்.. கொரோனா மரணங்களுக்கு இதுதான் காரணம்.. விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த மூன்று மாதமாக முக்கியமான ஆராய்ச்சி ஒன்றை செய்து வருகிறோம், பெரிய அளவில் டேட்டாவை உருவாக்கி இருக்கிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இன்றுதான் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கேஸ்கள் வந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 17082 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,125ஆக அதிகரித்துள்ளது.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேட்டி அளித்தார். அதில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மிகப்பெரிய ஆய்வை, ஆராய்ச்சியை செய்து வருகிறோம். இது குறித்து நான் பேச விரும்புகிறேன். எங்களிடம் நிறைய டேட்டா உள்ளது. தமிழகத்தில் தினமும் நிறைய கேஸ்கள் வருகிறது . தமிழகத்தில் 88% கேஸ்கள் அறிகுறி இல்லாத கேஸ்கள். 12% கேஸ்கள் அறிகுறி உள்ள கேஸ்கள்.

அறிகுறி என்ன

அறிகுறி என்ன

இந்த டேட்டா கிடைக்க காரணம் நாங்கள் செய்த டெஸ்ட்தான். அதிக டெஸ்டிங் மூலம் இதை கண்டுபிடித்து இருக்கிறோம். இப்படி அறிகுறி உள்ளவர்களுக்கு என்ன அறிகுறி இருக்கிறது என்று கேட்கலாம். தமிழகத்தில் அறிகுறி மூலம் கொரோனா வந்தவர்களில் 40% பேருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டுள்ளது.இருமல் 37% ஏற்பட்டுள்ளது. இதுதான் முக்கிய அறிகுறி ஆகும்.

மரணம் எப்படி

மரணம் எப்படி

தமிழகத்தில் தொண்டை வலி 10%. மூச்சு திணறல் 9% பேருக்கு ஏற்பட்டுள்ளது. 4% பேருக்கு மூக்கில் சளி இருந்துள்ளது. இப்படித்தான் தமிழகத்தில் கொரோனா அறிகுறி ஏற்படுகிறது. இதை மிக சரியான ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளோம். அதேபோல் கொரோனா மூலம் எப்படி மரணம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சி செய்து வருகிறோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும் எப்படி மரணம் ஏற்படுகிறது என்று ஆய்வு செய்தோம்.

எப்படி ஏற்படுகிறது

எப்படி ஏற்படுகிறது

தமிழகத்தில் 118 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் பலியாகும் 84% பேருக்கு கோமார்பரிட்டி எனப்படும் இதய பிரச்சனை, வயோதிகம், பிற நோய்கள் உள்ளது . கோமார்பரிட்டி இல்லாத 16% பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் சர்க்கரை வியாதி, ஹைப்பர் டென்ஷன் அதிகம் இருக்கும் நபர்கள்தான் அதிகம் பலியாகிறார்கள். ரத்த கொதிப்பு இந்த மரணத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.

11 வியாதிகள்

11 வியாதிகள்

இப்படி 11 வியாதிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பாதித்தால் அவர்கள் எளிதாக பலியாகிறார்கள். இதனால்தான் நம்மிடம் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதைதான் நாங்கள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உள்ளோம் . இதை எங்களிடம் மத்திய அரசு கேட்டு இருந்தது. இதை பார்த்து மத்திய அரசு தமிழக அரசை பாராட்டி உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+