கொரோனா.. ஒரே நல்ல செய்தி.. 2 நாட்களாக வேகம் காட்டும் தமிழகம்.. இதுதான் இப்போது மிக முக்கிய தேவை!
தமிழகம் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா டெஸ்டிங்கில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.
சென்னை: தமிழகம் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா டெஸ்டிங்கில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28711 ஆகும். மேலும் அரசுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் 135 ஆகும். கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆகும்.
அதேபோல் 28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 68519 ஆகும். நேற்றை விட தமிழகத்தில் குறைவான நபர்களுக்குத்தான் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிக குறைவான சோதனை
இத்தனை நாட்கள் தமிழகம் கொரோனா சோதனைகளை மிகவும் பொறுமையாக செய்து வந்தது. தினமும் 200-250 சோதனைகளை மட்டும் செய்து வந்தது. அதிக அளவில் சோதனை மையங்கள் இருந்தாலும் குறைவான எண்ணிக்கையில்தான் சோதனைகள் செய்யப்பட்டு வந்தது. அதோடு தமிழகம் ரேபிட் சோதனை கருவிகளுக்காக காத்து இருந்தது. ஆனால் அதுவும் தமிழகம் வராமல் அமெரிக்காவிற்கு திருப்பி விடப்பட்டது.

பின்தங்கிய தமிழகம்
இதனால் தமிழகம் கொரோனா சோதனையில் பின்தங்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து சுணங்கி போகாமல் தற்போது பிசிஆர் டெஸ்டிங்கை தமிழக அரசு வேகமாக செய்ய தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா சோதனை மையங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ரேபிட் சோதனை இல்லாமலே தமிழகத்தில் துரிதமாக சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

எத்தனை பேருக்கு சோதனை
நேற்று முதல் நாள் 1000 பேர் வரை கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று ஒரே நாளில் இந்த வேகம் அதிகரிக்கப்பட்டது. ஒரே நாளில் நேற்று 2091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. நேற்று மாலை வரை மொத்தம் 12746 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. தமிழகம் ஒரே நாளில் செய்த அதிக சோதனைகள் இதுவாகத்தான் இருந்தது.

தமிழகம் கலக்கல்
ஆனால் தற்போது தமிழகம் இதை முந்தியுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 6509 சாம்பிள்கள் சோதனைக்கைக்காக எடுக்கப்பட்டது. இதில் 3753 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டு முடிவுகள் வந்துள்ளது. ஆம் இன்று ஒரே நாளில் 3753 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது . மொத்தமாக தமிழகத்தில் இதுவரை 19255 சாம்பிள்கள் எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 15502 பேருக்கு சோதனை
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 15502 பேருக்கு சோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்துள்ளது. தமிழகம் கடந்த இரண்டு நாட்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை டெஸ்ட் செய்து சாதனை செய்துள்ளது. இதன் மூலம் தமிழகம் இப்போதுதான் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் சரியான பாதையில் செல்ல தொடங்கி உள்ளது. அதிகமான டெஸ்டிங்தான் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும்.

கேரளா நிலை
கேரளாவில் இப்போதுவரை 16 ஆயிரம் பேர் கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா சோதனையில் தமிழகம் இதன் மூலம் மூன்றாம் இடம் வந்துள்ளது. மேலும் 'சாரி' என்று அழைக்கப்படும் தீவிர சுவாச நோய் தொற்று (severe acute respiratory illness) அறிகுறி இருந்த 69 பேருக்கு தமிழகத்தில் நேற்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications