செப்.1 முதல்.. தமிழகத்தில் மீண்டும் ஓடும் பேருந்துகள்.. எப்படி இயக்கப்படும்? விதிமுறைகள் என்ன?
சென்னை: தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்து போக்குவரத்து மற்றும் சமூக இடைவெளி தொடர்பான கட்டுபாடுகள், விதிமுறைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு லாக்டவுன் அறிவித்தது. மார்ச் மாதம் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின் தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் போக்குவரத்து தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவில்லை. இடையில் மே மாதம் 37 மாவட்டங்களை 8 மண்டலங்களாக அதற்கு உள்ளே மட்டும் போக்குவரத்து அமலில் இருந்தது.

என்ன அறிவிப்பு
இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து தமிழகத்தில் மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் சென்னை பெருநகரப் பேருந்துப் போக்குவரத்து சேவை 1.09.2020 முதல் செயல்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து
இந்த போக்குவரத்து அனுமதி மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் பேருந்து மூலம் மாவட்டங்களை விட்டு வெளியே செல்ல முடியாது. உதாரணமாக திருவாரூருக்குள் பேருந்து மூலம் பயணம் செய்ய முடியும். ஆனால் தஞ்சாவூரில் இருந்து திருவாரூரில் செல்ல அனுமதி கிடையாது. இதற்கு பேருந்து சேவை தொடங்கப்படவில்லை.

குறைந்த எண்ணிக்கை
தற்போது குறைந்த எண்ணிக்கையில்தான் பேருந்து சேவை தொடங்கும் என்கிறார்கள். மொத்தமாக எல்லா பேருந்தும் இப்போதைக்கு இயங்க வாய்ப்பு இல்லை. அதற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆகும் என்று கூறுகிறார்கள். படிப்படியாக ஊழியர்கள் எல்லோரும் முழுதாக பணிக்கு திரும்பிய பின் முழு போக்குவரத்து தொடங்கும்.

எப்படி இயங்கும்
இதற்காக தற்போது பேருந்துகளை தயார் செய்யும் பணிகள் தொடங்க உள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே உள்ளது. நாளை மறுநாளுக்குள் வேகமாக பேருந்துகள் தயார் செய்யப்படும். அதே போல பேருந்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்காக சமூக இடைவெளி விவரங்கள், விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications