செம.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.. இன்றே டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் தற்போது குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் மருத்துவமனையில் கொரோனா காரணமாக 37 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Recommended Video

    கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி பூரணமாக குணமடைந்தார்

    இந்தியாவில் மொத்தம் 1046 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க கொரோன பரவி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 42 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

    இதில் ஒருவர் ஏற்கனவே குணப்டுத்தப்பட்டுவிட்டார். இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர். இவருக்குத்தான் முதலில் கொரோனா ஏற்பட்டது. தற்போது இவர் பூரண நலத்துடன் உள்ளார். அதன்பின் இன்னொரு உத்தர பிரதேச நபருக்கு கொரோனா குணப்படுத்தப்பட்டது.

    டெல்லி நபர்

    டெல்லி நபர்

    உத்தர பிரதேசத்தை சேர்ந்த அந்த இளைஞர் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் வந்தார். இவருக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன்பின் இவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இவருக்கு இரண்டு வாரம் தீவிரமாக கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த வாரம் இவர் குணப்படுத்தப்பட்டார்.

    நான்கு நாட்கள் எப்படி

    நான்கு நாட்கள் எப்படி

    இதற்கு அடுத்து நான்கு நாட்களுக்கு முன் கொரோனா காரணமாக ஒருவர் மதுரையில் பலியானார். இவர் இதற்கு முன் வெளிநாடு சென்றது இல்லை. அதேபோல் அண்டை மாநிலங்கள் எதற்கும் செல்லவில்லை. இவருக்கு கொரோனா ஏற்பட்டது. தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்த நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அந்த பயணியை இந்த மதுரை நபர் சந்தித்து இருக்கலாம் என்று கருதப்படுதுகிறது.

    குணம் அடைந்தனர்

    குணம் அடைந்தனர்

    தற்போது புதிதாக தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் தற்போது குணப்படுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த தம்பதிக்கு கொரோனா ஏற்பட்டது. இவர்களை இருவருக்கு தீவிரமாக சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களின் உடல் நிலை கொஞ்சம் தேறியது. இவர்களின் உடல்நிலை தீவிரமாக முன்னேறியது.

    டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

    டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

    இந்த நிலையில் இவர்களுக்கு கடைசியாக செய்யப்பட்ட இரண்டு சோதனைகள் நெகடிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42 பேரில் ஒருவர் பலியாகி உள்ளனர். 4 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மருத்துவமனையில் கொரோனா காரணமாக 37 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+