15 நிமிடத்தில் கூட இறக்கிறார்கள்.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. தமிழகத்தில் என்ன நடக்கிறது.. பகீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களில் தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது .

தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. மிக சரியான திட்டமிடல் மற்றும் மருத்துவ முறைகள் மூலம் கொரோனா நோயாளிகள் தமிழகத்தில் வேகமாக குணப்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இறப்பு சதவிகிதமும் குறைவாகவே உள்ளது.

மகாராஷ்டிரா குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் தமிழக அரசிடம் ஆலோசனை கேட்கும் அளவிற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா அதிகம் உள்ள மாநிலங்கள் உடன் தொடர்புபடுத்தி பார்த்தால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களில் தினசரி பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. முன்பு தினசரி பலி எண்ணிக்கை 3-4 என்ற அளவில் மட்டுமே இருந்தது. அதன்பின் தினமும் சராசரியாக 10 பேர் பலியாகி வந்தனர். ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாக தினசரி பலி எண்ணிக்கை 15ஐ விட அதிகமாக இருக்கிறது.

அதிகரிக்கும் எண்ணிக்கை

அதிகரிக்கும் எண்ணிக்கை

தமிழகத்தில் தினசரி பலி எண்ணிக்கை 17-19 என்ற ரீதியில் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 289 என்று ஆகியுள்ளது. இப்படி தமிழகத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. முக்கியமாக கொரோனா நோயாளிகளுக்கு ஏற்கனவே இருந்த நோய்களும், உடல் பிரச்சனைகளும் மரணத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிகமான நபர்கள்

அதிகமான நபர்கள்

தமிழகத்தில் கொரோனா காரணமாக பலியாகும் நபர்களில் 80%க்கும் அதிகமான நபர்கள் ஏற்கனவே உடலில் வேறு பிரச்சனை உள்ளவர்கள். அதாவது ஏற்கனவே உடலில் சிறுநீரக கோளாறு, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், அதிக எடை, உறுப்பு செயல் இழப்பு என்று ஏற்கனவே அவர்களுக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்துள்ளது. இப்படி உடலில் பிரச்சனை இருக்கும் நபர்கள்தான் தமிழகத்தில் அதிகமாக பலியாகிறார்கள்.

வயது காரணம்

வயது காரணம்

தமிழகத்தில் தற்போது 30-40 வயது நபர்களும் பலியாகி வருகிறார்கள். ஆனால் உண்மையில், தமிழகத்தில் பலியாகும் நபர்களில் அதிகமானோர் 50+ வயதை அடைந்தவர்கள். இளம் வயதினர் தமிழகத்தில் குறைவாகவே பலியாகிறார்கள். இது ஒரு வகையில் நல்ல விஷயம். அதிக வயது + உடல் நோய் உள்ளவர்கள்தான் அதிகமாக இதுவரை தமிழகத்தில் பலியாகி உள்ளனர்.

கடைசி நேரம்

கடைசி நேரம்

இன்னொரு முக்கிய காரணம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பலர் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதாவது உடல் மோசமாகி, தங்களுக்கு கொரோனா இருப்பது கடைசி நேரத்தில் தெரிந்து , அதன்பின்தான் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதனால் அவர்களை கடைசி நேரத்தில் சிகிச்சை கொடுத்து காப்பாற்ற முடியவில்லை. இதுவும் முக்கிய காரணம் ஆகும்.

15 நிமிடம் எப்படி

15 நிமிடம் எப்படி

முக்கியமாக கடைசி நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் இரண்டு வாரம் முன் பலியானார். இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெறும் 15 நிமிடத்தில் பலியானார். இவர் உடல் மோசமாகி கடைசி நேரத்தில் அனுமதிக்கப்பட்டார். இப்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடைசி நேரத்தில் பலர் அனுமதிக்கப்படுகிறார்கள் . மற்றபடி தமிழக மருத்துவர்கள் இயன்ற வரை தங்களால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+