சேர்ந்து வாழ முடியாது.. விவாகரத்து கொடுத்துடுங்க! ஜெயம் ரவி கோரிக்கை மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமரச மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, சிறுவயதிலிருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். கடந்த 1989ம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், பின் நாட்களில் தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டார். குறிப்பாக 2003ல் வெளியான 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அவர் பெயர் நன்கு பரிட்சயமானது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் ஹிட் அடிக்கவே, அவர் கோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவானார்.

இடையே கடந்த 2009ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான சுஜாதா விஜயக்குமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையில் மனக்கசப்பு இருந்து வந்தது. இதனையடுத்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சோஷியல் மீடியாவில் தனது மனைவியின் புகைப்படங்களையும், பெயரையும் ஜெயம் ரவி நீக்கியிருந்தது, இருவருக்கும் இடையே உரசல் இருந்ததை வெளியுலகிற்கு தெரியப்படுத்தியது.
இந்த உரசலின் உச்சமாக, மனைவி ஆர்த்தியிடமிருந்து ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். அதேபோல, அவரது மனைவி ஆர்த்தி காணொலி வாயிலாக ஆஜராகியிருந்தார். விசாரணையில் இருவரும் சமரச மையத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications