தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு.. அதிர்ச்சி அளித்த கோவை
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. இதில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை இபபோது பார்ப்போம்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 86 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து தமிழகம் நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 571 உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 748 பேருடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்றைக்கு வெளியான கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளில் மிக அதிகபட்சமாக கோவையைச் சேர்ந்த 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சென்னையிலும், கடலூரிலும் புதிதாக தலா 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

தஞ்சை நீலகிரி 4
நாகப்பட்டினத்தில் 6 பேருக்கும, கடலூரில் 5 பேருக்கும், தஞ்சாவூர் மற்றும் நீலகிரியில் தலா 4 பேருக்கும், செங்கல்பட்டு, சேலத்தில் தலா 3 பேருக்கும், புதிதாக கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டள்ளது. இதேபோல் திண்டுக்கல், ராணிப்பேட்டை, மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பதும் இன்றைய நிலவரப்படி(05.4.2020) உறுதியாகி உள்ளது.

கோவை 2வது இடம்
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை இப்போது பார்ப்போம். தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக சென்னையில் 95 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கோவை உள்ளது. கோவையைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும், திருநெல்வேலியில் 38 பேருக்கும், ஈரோட்டில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

செங்கல்பட்டு 22
நாமக்கல் மாவட்டத்தில் 25 பேருக்கும்,ராணிப்பேட்டையில் 25 பேருக்கும், தேனியில் 23 பேருக்கும், கரூரில் 23 பேருக்கும், செங்கல்பட்டில் 22 பேருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரையில் 19 பேருக்கு, திருச்சியில் 17 பேருக்கு, விழுப்புரத்தில் 15 பேருக்கு, திருவாரூரில் 12 பேருக்கு, சேலம் 12 பேருக்கு, திருவள்ளூரில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர், திருப்பத்தூர்
விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தில் தலா 11 பேருக்கும், திருப்பத்தூர், கடலூரில் தலா 10 பேருக்கும் , திருவண்ணாமலையில் 8 பேருக்கும், கன்னியாகுமரியில் 6 பேருக்கும், சிவகங்கையில் 5 பேருக்கும், தஞ்சாவூரில் 5 பேருக்கும், வேலூரில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், நீலகிரியில் தலா 4 பேருக்கும், திருப்பூரில் 3 பேருக்கும், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் இரண்டு பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 32 மாவட்டங்களில் 571 பேர் வைரஸ் தொற்றால் இன்று வரை பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications