கோவை மக்களுக்கு குட் நியூஸ்.. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆறுதல் அளித்த கொரோனா!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிவேகமாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,200-க்குள் குறைந்த கொரோனா தற்போது 900-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 862 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பு 27,08,230 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பும் குறைவு
கொரோனாவுக்கு மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் ஒருவர் இறந்தார். தஞ்சாவூரில் 2 பேர் உயிரிழந்தனர்,. இதுவரை கொரோனாவுக்கு 36,214 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,009 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,61,428 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை டாப்
10,588 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,00,687 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,09,05,270 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 122 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றை விட பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

சென்னையில் சதம்
கோவையில் 99 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவையில் கொரோனா பாதிப்பு 100-க்குள் குறைந்து விட்டது. செங்கல்பட்டில் 79 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 26 பேருக்கும், மதுரையில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 17 பேருக்கும், திருவள்ளூரில் 34 பேருக்கும், திருச்சியில் 30 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 60 பேருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ஈரோட்டில் 67 பேருக்கும், சேலத்தில் 54 பேருக்கும், நாமக்கல்லில் 39 பேருக்கும், தஞ்சாவூரில் 30 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications