தமிழகத்தில் கிடுகிடு.. 1989 பேருக்கு கொரோனா.. 30 பேர் மரணம்.. சென்னையில் 30 ஆயிரத்தை கடந்த பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ தொற்றால் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து இன்று 1362 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 23409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். தற்போதைய நிலையில் தமிழகத்தில் 18,878 பேர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இன்று ஒரு நாளில் 17,911 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 691817 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 1,989 பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 42687 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாதிப்பு

தமிழகத்தில் பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து 14 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பும் 13 வது நாளாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. கடந்த 8வது நாட்களாக 1500ஐ கடந்துள்ளது. தமிழகத்திற்குள் மட்டும் இன்று 1956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை விட்டு வெளியே பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த 33 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் ஒரு நாளில் 1,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. ‘

எங்கு எவ்வளவு பாதிப்பு

எங்கு எவ்வளவு பாதிப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 136 பேர், திருவள்ளூரில் 78 பேர், திருவண்ணாமலையில் 49 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 22 பேர், தூத்துக்குடியில் 28 பேர், திருநெல்வேலியில் 15 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, கடலூரில் தலா 11 பேருக்கும், கன்னியாகுமரியில் 10 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், கரூரில் 5 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கும், பெரம்பலூரில், திருப்பத்தூரில் தலா 2 பேருக்கும், திருவாரூரில் 14 பேருக்கும், வேலூரில் 13 பேருக்கும், விழுப்புரத்தில் 10 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையில் 13 பேருக்கும், தஞ்சாவூரில் 10 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 குணம் அடைந்தவர்கள்

குணம் அடைந்தவர்கள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1362 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 13ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 23,409 பேர் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 17,179 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 14180 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மிக அதிகமான சோதனை

மிக அதிகமான சோதனை

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 17,911 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 691817 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனாவால் 1,989 பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 42687 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் .13 முதல் 60 வயது வரை கொரோனாவால் 35680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 60 வயதை கடந்த 4813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயதுக்கு உட்பட் 2193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் மரணம்

கொரோனாவால் மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 18 அரசு மருத்துவமனையிலும், 12 தனியார் மருத்துவமனையிலும் ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 30 பேரில் 2 பேர் 27 வயது நபர்கள் ஆவர். ஒருவர் 29 வயது நபர் ஆவார். இன்று உயிரிழந்த 30 பேரில் பெரும்பாலனோர் 50 வயதை கடந்தவர்கள் ஆவர்.

ஆண் பெண் விவரம்

ஆண் பெண் விவரம்

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,989 பேரில் 1,183 பேர் ஆண்கள், 806 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 42,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26,350 பேர் ஆண்கள், 16,320 பேர் பெண்கள், 17 பேர் திருநங்கைகள் ஆவர். ஜூன் 13ம் தேதி நிலவரப்படி 18,878 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் 9 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் 45 அரசு மருத்துவமனையில் உள்ளது. 34 தனியார் மருத்துவமனையில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+