உடலில் லேசான சிவப்பு.. காய்ச்சல்.. பெரிய சைட்-எபெக்ட் இல்லை.. நம்பிக்கை தரும் இந்தியாவின் கோவாக்சின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவாக்சின் மருந்தின் மனித சோதனையில் பெரிய அளவில் பின்விளைவுகள் இல்லை, மருந்து பெற்றுக்கொண்ட நபர்கள் இயல்பாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Recommended Video

    2 கொரோனா Vaccines: 6 நகரங்களில் வேகமாக மனித சோதனை..

    ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ( Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (COVAXIN) என்ற மருந்துக்கு மனிதர்கள் மீது சோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவை பரத் பயோடெக் நிறுவனம் உடன் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி உள்ளது.

    தற்போது கோவாக்சின் மருந்தின் மனித சோதனை முக்கியமான நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை, பாட்னா, ஹைதராபாத், ஹரியானா , டெல்லியில் நடக்கிறது. வரும் நாட்களில் நாக்பூர், புவனேஷ்வர், கோரக்பூர், கான்பூர், கோவா, விஷக்கப்பட்டத்தில் மனித சோதனை நடக்க உள்ளது.

    எய்ம்ஸ் இல்லை

    எய்ம்ஸ் இல்லை

    இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று கோவாக்சின் மருந்து கொடுக்கப்பட்ட நபர் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். இவர் வீட்டில் வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறார். 30 வயது நிரம்பிய இவருக்கு 0.5 எம்எல் மருந்து கொடுக்கப்பட்டது. இவருக்கு மருந்து கொடுத்து 24 மணி நேரத்தில் எந்த விதமான பின்விளைவும் ஏற்படவில்லை. இவர் தற்போது வரை நலமாக இருக்கிறது.

    பாட்னா எப்படி

    பாட்னா எப்படி

    அதேபோல் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 11 பேருக்கு கோவாக்சின் மருந்து கொடுக்கப்பட்டது. கடந்த ஜூலை 15ம் தேதி மருந்து கொடுக்கபட்டது. இவர்களுக்கும் 0.5 எம்எல் மருந்து கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு லேசான பின்விளைவுகள் உடலில் ஏற்பட்டுள்ளது.உடலில் மருந்து செலுத்தப்பட்ட தோல் பகுதி மட்டும் சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. சிலருக்கு உடலில் வலி ஏற்பட்டுள்ளது. அதேபோல் லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    வழக்கமாக இருப்பது

    வழக்கமாக இருப்பது

    ஆனால் இதெல்லாம் சாதாரண அறிகுறிகள்தான். சாதராண பின்விளைவுகள்தான் என்று கூறுகிறார்கள். பொதுவாக தடுப்பு மருந்து போடப்பட்டால் இப்படி பின்விளைவுகள் ஏற்படுவது வழக்கம். ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்தாக மாற்றி உடலில் செலுத்துகிறோம். அதனால் கண்டிப்பாக உடலில் சிறிய சிறிய பின் விளைவுகள் இருக்கும். அது வழக்கம்தான் என்கிறார்கள்.

    அடுத்து எப்போது கொடுப்பார்கள்

    அடுத்து எப்போது கொடுப்பார்கள்

    பாட்னாவில் மருந்து கொடுக்கப்பட்ட நபர்களுக்கு வரும் ஜூலை 29ம் தேதி இரண்டாம் கட்ட மருந்து அளிக்கப்படுகிறது. கூடுதலாக மருந்து கொடுத்து இரண்டாம் கட்ட சோதனை செய்ய இருக்கிறார்கள். முதல் சோதனை பின்விளைவு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் இரண்டாம் கட்ட சோதனை மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்ட சோதனையில் பாட்னாவில் 18 பேர் வரை கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    அதேபோல் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் எஸ்ஆர்எம் மெடிக்கல் கல்லூரியில் இந்த கோவாக்சின் கொடுக்கப்பட்டது. இரண்டு பேருக்கு மருந்து கொடுக்கப்பட்டது. 0.05 எம்எல் அளவிற்கு மட்டுமே மருந்து கொடுக்கப்பட்டது. இவர்களுக்கும் பின்விளைவுகள் எதுவும் இல்லை. 14 நாட்கள் கழித்து இவர்களுக்கு மீண்டும் மருந்து கொடுக்கப்படும்.அதன்படி 28, 42, 104, 194 நாட்களில் இவர்களுக்கு மருந்துகள் மீண்டும் மீண்டும் கொடுக்கப்படும்.

    ரோஹ்டாக் பகுதி

    ரோஹ்டாக் பகுதி

    அதேபோல் ஹரியானாவில் செய்யப்பட்ட மனித சோதனையில் 20 பேருக்கு மருந்து கொடுதிக்கப்பட்டது. இவர்கள் யாருக்கும் இன்னும் அறிகுறிகள், பின்விளைவுகள் ஏற்படவில்லை. முழுமையாக முடிவுகளை அறிவிக்க இன்னும் சில நாட்கள் ஆகும். இந்த முதல் கட்ட சோதனை முழுக்க முழுக்க பாதுகாப்பு மற்றும் டோஸேஜ் அளவை கணக்கிடவே செய்யப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+