"நாடே நாசமாகிடுச்சு.. அவர்தான் காரணம்.. சாதிகள் இல்லாத இந்தியாவை பற்றி பேச தயாரா?".. டி.ராஜா கேள்வி

முக ஸ்டாலினை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி ராஜா பாராட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சாதிகள் இல்லாத இந்தியாதான் தேவை என ஆர்எஸ்எஸ் பேச இன்னைக்கு தயாராக இருக்கிறதா? முதல்ல இந்தியாவை இப்படிப்பட்ட நெருக்கடியில் இருந்து மீட்க்கவேண்டும் என்றால், பாஜக-வை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இவைதான்:

"கொங்கு நாடு பற்றி பேசுபவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.. அதிமுக ஆட்சியிலேயே தமிழ்நாடு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு விட்டது.. இப்போது கடன்கார மாநிலமாக உள்ளது... திமுக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.. காரணம், திமுக அரசு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறது.

 திமுக

திமுக


நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் ஒன்றிய அரசு அதை புரிந்து கொள்ளவில்லை... திமுக வை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இந்தியா போன்ற பெரிய நாட்டில் தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலம் நீட் தேர்வை எதிர்த்தாலும் அதை நிறுத்த வேண்டும்... எல்லா அதிகாரங்களையும் ஒன்றிய அரசு கையில் வைத்து கொள்ளவும், வகுப்புவாதத்தையும் மதவாதத்தையும் கையில் எடுக்கவும் பாஜக முயல்கிறது.

பாஜக

பாஜக

இந்தியாவில் பொருளாதாரம் இன்று மிகவும் பின்தங்கிவிட்டது.. கொரோனாவை எதிர்கொள்வதற்கு முன்னாடியிருந்தே இந்திய பொருளாதாரம் நலிந்துபோய்தான் இருந்தது. இப்போது தொற்று ஏற்பட்டதும், இன்னும் அதிகமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது... எப்போதுமே இல்லாத அளவிற்கு இந்தியா வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது... 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளனர்... வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது... கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் பெட்ரோல் விலை இன்னமும் குறையவில்லை.

 ஸ்மார்ட் போன்கள்

ஸ்மார்ட் போன்கள்

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமே மத்திய அரசு சுமத்தும் வரிவிதிப்புதான்.. தொற்றுக்கு பிறகு, கல்வித்துறையிலும் நெருக்கடி சூழ்ந்துள்ளது.. குழந்தைகளால் ஸ்மார்ட் போன்கூட வாங்க வசதி இல்லை.. இதனால், ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் குழந்தைகள், ஸ்மார்ட் போன் வாங்க முடியாத குழந்தைகள் என இந்த குழந்தைகளிடம் ஏற்றத்தாழ்வுதான் ஏற்பட்டு வருகிறது.

 பட்டினி

பட்டினி

இந்தியாவில்தான் அதிக மக்கள் பட்டினியால் கிடக்கிறார்கள்... மோடி அரசின் கொள்கை இந்தியாவையே நாசப்படுத்திவிட்டது.. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி அறிவித்த அறிவிப்புகள் அனைத்துமே கார்ப்பரெட் நிறுவனங்கள், பெரு முதலாளிகள் கொள்ளை அடிக்கும் அறிவிப்புகளாகவே உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குகிறார்கள்... அன்னிய முதலீடுகளுக்கு கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்கள்... இந்த கொரோனாவை பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.

 தடுப்பூசி

தடுப்பூசி

2020-ல் இந்த தொற்று தீவிரம் ஏற்பட்டுவிட்டது.. அதை எப்படி எதிர்கொள்வது என்று மத்திய அரசு ஆராயாமல், அமெரிக்க அதிபரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க திட்டமிட்டு கொண்டிருந்தது.. இதனால்தான் மக்கள் பட்டினியால் கிடந்து சாகிறார்கள்.. தமிழகம் உட்பட பல மாநிலங்கள் தடுப்பூசி கிடைக்காமல் உள்ளது.. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதிலும் பாஜக படுதோல்வி அடைந்துவிட்டது... பாஜக மக்களின் செல்வாக்கையும் இழந்துவருகிறது. மோடியின் தவறான கொள்கைதான் இதற்கு காரணம்.

பாஜக

பாஜக

சாதிகள் இல்லாத இந்தியாதான் தேவை என ஆர்எஸ்எஸ் பேச இன்னைக்கு தயாராக இருக்கிறதா? முதல்ல இந்தியாவை இப்படிப்பட்ட நெருக்கடியில் இருந்து மீட்கவேண்டும் என்றால், பாஜக-வை அதிகாரத்தில் இருந்தே அகற்ற வேண்டும்... நாட்டையும் மக்களையும் காப்பாற்ற பாஜகவிற்கு எதிராக எல்லா கட்சிகளும் ஓரணியில் திரளவேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+