பாஜகவின் "நயவஞ்சகம்".. சிறுபான்மை மாணவர்களின் கல்வி மீது இத்தனை வன்மமா? சென்னையில் கொதித்த தோழர்கள்
சென்னை: சிறுபான்மை மாணவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டத்தையும் மீண்டும் அமல்படுத்திட வேண்டும் என மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்வைத்து வருகிறது.. அந்தவகையில், மத்திய அரசுக்கு எதிராக 10 நாள் பிரச்சார பயணத்தையும், பேரணியையும் மேற்கோள்ள போகிறது.

இதற்காக அனுமதி வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்... அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ஹைகோர்ட்டில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.. கட்சியின் 60வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அந்த மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...
பிரச்சார பயணம்: அதேபோல, அக்டோபர் 21 முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பிரச்சார பயணம், பேரணி நடத்த அனுமதி வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் இன்று 13, நாளை 14 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது... இன்று நடந்த கூட்டத்திற்கு, மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமை தாங்கினார்.
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
சச்சார் குழு: இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இவைகள்தான்: "இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு அமைந்திருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம், சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் சிறுபான்மை மக்களின் பின்தங்கிய நிலையை போக்குவதற்காக பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தது.
அதில் மிக, மிக முக்கியமானது கல்வி பயிலும் சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணங்கள் மற்றும் விடுதி செலவுகளுக்கான உதவித் தொகைகள் அளிக்கப்பட்டு வந்தது. பாஜக அரசாங்கம் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஃபெலோஷிப் கடந்தாண்டிலிருந்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது.
அதேபோல, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், பிரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பில் 1 முதல் 8ம் வகுப்பிற்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. வெளிநாட்டில் பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விக்காக வழங்கப்படும் கடனுக்கான வட்டிக்கு மானியம் அளிக்கப்பட்டு வந்தது... அதையும் பாஜக தலைமையிலான அரசாங்கம் கடந்த வருடம் நிறுத்தி விட்டது.
சிறுபான்மை மாணவர்கள்: இந்த திட்டங்களிலிருந்து சிறுபான்மை மாணவியருக்கான பேகம் ஹஸ்ரத் மஹால் கல்வி உதவி தொகைத்திட்டம். இந்த ஆண்டு முதல் இந்த திட்டத்தையும் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது வன்மத்தோடு சிறுபான்மை மாணவர்களின் கல்வியை குறிவைத்து பாஜக அரசினால் நடத்தப்படும் தாக்குதலாகும்.
இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என்று எதுவும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு இருக்கவே கூடாது என்பதை நோக்கமாக கொண்டே, பாஜக அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகையிலும் அத்தகைய நயவஞ்சகத்துடனேயே நடந்து கொள்கிறது. இது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின - பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இல்லாமல் செய்வதற்கான முன்னோட்டமாக உள்ளது.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு இந்த நயவஞ்சக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறது.
தீர்மானங்கள்: ஜனநாயக இயக்கங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டுமென்றும், ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து கல்வி உதவித் திட்டங்களையும் மறுபடியும் அமல்படுத்த வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது" என்று அந்த தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா?












Click it and Unblock the Notifications