Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அங்கியே போங்க".. சிபிஎம் பேரணிக்கு அனுமதி கோரி வழக்கு.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு.. கவனிக்கும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையை அணுகும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியிருக்கிறது.. அத்துடன், அதன்மீது 7 நாட்களில் முடிவெடுக்க காவல்துறைக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60வது ஆண்டை முன்னிட்டு,மத்திய அரசின் மதவாதக் கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அக்டோபர் 21ம் தேதி முதல் 30ம் வரை பரிச்சார பயணங்கள் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி, தமிழக டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மனு தரப்பட்டது.

பேரணிக்கு அனுமதி: கடந்த 10ம் தேதி அளிக்கப்பட்ட இந்த மனுவில், எந்தவொரு தீர்வும் கிடைக்காததால், இந்த மனுவை பரிசீலித்து பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, சென்னை ஹைகோர்ட்டில், அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மனு தாக்கல செய்தார்.

CPM Procession and Madras High Court to directs TN DGP to reply in marxist case today

அந்த மனுவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60-வது ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பிரச்சார பயணங்கள் மற்றும் பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக காவல்துறை டிஜிபிக்கு அக்டோபர் 10-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

விசாரணை: இதையடுத்து, இந்த மனுவானது, நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் என்ஜிஆர்பிரசாத் மற்றும் ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, "பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் அளிக்காத வகையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

தங்களது கட்சி சார்பில் நடத்தக்கூடிய நிகழ்வுகளில் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணியை காரணம் காட்டி, தங்கள் பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்க வாய்ப்புள்ளது. அதனால்தான், இந்த வழக்கு தொடரப்பட்டது" என்று வாதிட்டனர்.

டிஜிபி விளக்கம்: இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக காவல்துறை டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 20ம் தேதி அதாவது இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்திருந்தார்.

அதன்படியே, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பேரணி, பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படாது என அரசு வழக்கறிஞர் கூறினார்.

"இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உள்ளூர் காவல் நிலையம் அல்லது காவல் ஆணையரிடம் தான் மனு அளிக்க வேண்டும் என்றும், உள்ளூர் சூழலை பொறுத்து அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டால், உள்ளூர் சூழலை பொறுத்து முடிவு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது' என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மாற்று தேதி: இதனையடுத்து, உள்ளூர் காவல்துறையிடம் மனு அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு அளிக்கப்படும் மனுவை பரிசீலித்து 7 நாட்களில் அனுமதி வழங்குமாறும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.. ஒருவேளை அனுமதி கேட்கும் தேதியில், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருந்தால், மாற்று தேதியில் வழங்கலாம் என்றும் நீதிபதி கூடுதலாக உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+