தமிழ்நாட்டில் பிறை தெரிந்தது.. நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. தலைமை ஹாஜி அறிவிப்பு!
சென்னை: பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சுஹுர் எனப்படும் விடியலுக்கு முந்தைய உணவை சாப்பிட்ட பிறகு சூரியன் மறையும் வரை எதுவும் உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். பிறை கணக்குப்படி 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் வழக்கம்.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 10) ரமலான் பிறை தென்பட்டது. இதனால் இன்று (மார்ச் 11 - திங்கட்கிழமை) முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவைகளை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு, ரமலான் மாதம் நாளை முதல் தொடங்கும் சூழலில், இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications