வாக்கி டாக்கி..வழிப்பறி! கீழ்பாக்கத்தை கிறுகிறுக்க வைத்த ராமமூர்த்தி..குற்ற பிரிவில் கிரைம் புள்ளி.!
சென்னை: ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்தச் சென்ற தயிர் வியாபாரியை மிரட்டி 40 ஆயிரத்தை பறித்துச் சென்ற காவல்துறை உதவி ஆய்வாளர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். குற்றப்பிரிவு போலீசில் பணியாற்றி குற்றவாளியான சப்-இன்ஸ்பெக்டரின் பின்னணி குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்..
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஆயிரக்கணக்கான காவலர்கள் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு சைபர் கிரைம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். சில நேரங்களில் காவலர்களை பொதுமக்களிடம் அத்துமீரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது காவல்துறையினரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மெரினா உள்ளிட்ட பகுதிகளில் தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி செல்போன் பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு காவலர்கள் கைதாகி வருகின்றனர்.
தயிர் வியாபாரி: இந்த நிலையில் சென்னையில் ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த சென்ற வியாபாரியிடம் வாக்கிடாக்கியுடன் டிப்டாப் உடையில் வந்த காவல்துறை அதிகாரி பணத்தை பிடுங்கி சென்ற சம்பவம் அதனைத் தொடர்ந்து அவர் கைதாகி உள்ள சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. சென்னை எழும்பூர் அருகே இருக்கும் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சித்திக் தயிர் வியாபாரம் செய்து வருகிறார். வீட்டில் தயிர் தயாரித்து சென்னையின் பல்வேறு பகுதிகளை இருக்கும் கடைகளுக்கு சப்ளை செய்து வருகிறார். விற்பனை முடிந்ததும் வசூலான பணத்தை வங்கியில் செலுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
வாக்கி டாக்கி கொள்ளை: இந்த நிலையில் நேற்று கடைகளுக்கு தயிர் சப்ளை செய்த சித்திக் பின்பு வசூலான பணத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் சிடிஎம் இயந்திரத்தில் பணத்தை செலுத்த சென்றிருக்கிறார். அப்போது அங்கு கையில் காவல்துறையினர் வைத்திருக்கும் வாக்கி டாக்கியுடன் சிவில் உடையில் வந்த ஒரு நபர் தான் காவல்துறையில் பணியாற்றுவதாக கூறியிருக்கிறார். மேலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் பணத்தை ஏடிஎம்மில் வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள் என கேட்டபோது தான் தயிர் விற்பனை செய்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக கூறியுள்ளார்.
பணம் கொள்ளை: அப்போது உன் மேல் சந்தேகம் உள்ளது.. தற்போது இந்த பணத்தை நான் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்கிறேன் அங்கு வந்து எழுதி கொடுத்துவிட்டு பணத்தை வாங்கி விட்டுச் செல்லுங்கள் எனக் கூறி பணத்தை பிடுங்கி விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். பணத்தை இழந்த சித்திக், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த காவலர்களை சந்தித்து தன்னிடம் வாக்கி டாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் பணத்தை வாங்கி வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அப்படி யாரும் இங்கு பணத்தை கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றும் சொன்ன போலீசார் இது தொடர்பாக புகார் எழுதி தருமாறு கேட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள்: இதனைத் தொடர்ந்து தன்னிடம் பணத்தை எடுத்துச் சென்ற நபர் குறித்த அடையாளங்களுடன் சித்திக் புகார் எழுதி கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்தார். இதையடுத்து வாக்கி டாக்கி கருவியுடன் வந்து கொள்ளையடித்துச் சென்ற நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சந்தி ரத்தூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து, கீழ்பாக்கம் உதவி ஆணையர் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மேற்கொண்டனர். தொடர்ந்து ஏடிஎம் மையத்திற்கு சென்ற போலீசார் வங்கி அதிகாரிகள் உதவியுடன் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர்: அதில் பணத்தை எடுத்துச் சென்றது உண்மையிலேயே ஒரு போலீஸ் தான் என்பது தெரியவந்தது. ராமமூர்த்தி என்ற சப் இன்ஸ்பெக்டர் தற்போது ஐசிஎப் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பணம் சித்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.
கிரைம் பின்னணி: மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்கள் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்திருக்கிறார். லஞ்சம் உள்ளிட்டவை மூலம் நிறைய சொத்துக்களை வாங்கி குவித்ததாக கூறப்படுகிறது. தற்போது போக்குவரத்து பிரிவில் பணியாற்றி இருக்கும் அவர் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டதோடு, இரவு பல்வேறு நபர்களிடம் இதுபோன்ற வழிப்பறியிலும் ஈடுபட்டதாகவும், இரவு நேரங்களில் பார்கள், வியாபாரிகள், பீச்சில் காதல் ஜோடிகளிடமும் கைவரிசை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications