Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விஜி, விஜி".. திசை மாறிய மனைவி.. பச்சை துரோகமும், பழைய சோறும்.. பார்த்தசாரதி குளத்தில் அந்த "உருவம்"

பார்த்தசாரதி கோயில் குளத்தில் விழுந்து தற்கொலை செய்துள்ளார் ஒரு இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு பெண் தடம் மாறினால், ஒரு குடும்பமே சிதறி சின்னாபின்னமாகிவிடும் என்பதுடன், அது உயிருக்கே ஆபத்தாகிவிடும் அவலமும் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.. அதற்கு இன்னொரு உதாரணம்தான் விஜயலட்சுமி.

சூளைமேடு கண்ணகி தெருவை சேர்ந்தவர் செல்வம்,.. 42 வயதாகிறது.. இவர் ஒரு பெயிண்ட்டர்.. மனைவி பெயர் விஜயலட்சுமி.. 38 வயதாகிறது.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், செல்வத்துக்கு ஒருநாள் திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதி திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்..

 சீரியஸ்

சீரியஸ்

இதனால் குடும்பத்தினர் பதறி போய், அவரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. அங்கு தீவிரமான சிகிச்சையும் தரப்பட்டது.. ஆனால், 4 வது நாளே செல்வம் இறந்துவிட்டார்.. அதாவது செப்டம்பர் 6ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.. இதனால், அதிர்ச்சி அடைந்த செல்வத்தின் உறவினர்கள், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நினைத்தனர்.. அதனால் சூளைமேடு போலீசிலும் இதுகுறித்து புகார் தந்தனர்..

 பழைய சாப்பாடு

பழைய சாப்பாடு

இந்த புகாரையடுத்து, போலீசாரும் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.. செல்வத்தின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், செல்வம் சாப்பிட்ட சாப்பாட்டில் விஷம் இருந்ததும், அதனாலேயே செல்வம் உயிரிழந்ததும் உறுதியானது.. இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வருவதற்குள், விஜயலட்சுமியை காணவில்லை.. எங்கோ தலைமறைவாகிவிட்டார்.. இதனால், அவர் மீது சந்தேகம் வலுத்த நிலையில், விஜயலட்சுமியை போலீசார் தேடி வந்தனர்.. இறுதியில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த அவரை மடக்கி பிடித்தனர்..

 வண்டவாளம் + தண்டவாளம்

வண்டவாளம் + தண்டவாளம்

அப்போது விஜயலட்சுமியுடன் மோகன் என்பவரும் உடன் இருந்தார்.. இவருக்கு முண்டக்கண்ணு என்று இன்னொரு பெயர் இருக்கிறதாம்.. இவர்கள் 2பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.. அப்போதுதான், விஜயலட்சுமியின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி ஆரம்பித்தது. விஜயலட்சுமி தினமும் மெட்ரோ ரயிலில்தான் வேலைக்கு செல்வாராம்.. அப்போது அதே ரயிலில் மோகனும் வந்துள்ளார்.. இருவருக்கும் ட்ரெயினில் பழக்கமாகி உள்ளது.. நாளடைவில் இது கள்ளக்காதலாகவும் உருமாறியது.. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.. உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்..

 சோற்றில் விஷம்

சோற்றில் விஷம்

இந்த விஷயம் ஒருநாள் செல்வத்துக்கு தெரிந்துவிட்டது.. அதனால், மனைவியை கண்டித்துள்ளார்.. தவறான உறவு கூடாது என்று அறிவுரை சொல்லி உள்ளார்.. ஆனால், விஜயலட்சுமிக்கு இது பிடிக்கவில்லை.. செல்வம் உயிருடன் இருக்கும்வரை, நிம்மதியாக இருக்க முடியாது என்று முடிவெடுத்து, கொலை செய்ய முடிவு செய்தார்.. இந்த விஷயத்தை மோகனிடமும் சொல்லவும், கடைக்கு போய் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வந்து விஜயலட்சுமியிடம் தந்துள்ளார் மோகன்.. எப்போதுமே காலை நேரத்தில், செல்வம் பழைய சோறு சாப்பிடுவாராம்.. அந்த பழைய சோற்றில் விஷத்தை கலந்து குடிக்க செய்துள்ளார் விஜயலட்சுமி

 பழைய சோறு

பழைய சோறு

திடீரென மயங்கி விழுந்துவிடவும், தினமும் மது குடித்துவிட்டு வந்ததால்தான், உடம்பு சரியில்லாமல் மயங்கி விழுந்ததாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைத்தார் விஜயலட்சுமி.. ஆனாலும் போஸ்ட் மார்ட்டம் அளவுக்கு இந்த கேஸ் போகும் என்று விஜயலட்சுமி எதிர்பார்க்கவில்லை.. சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக போலீசார் மாற்றினர்.. இறுதியில் விஜயலட்சுமியும் மோகனையும் கைது செய்தனர்.. இந்த மோகன் என்பவர் ஒரு கிரிமினல்.. சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம்.. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை என பல மாவட்டங்களிடல் ஏகப்பட்ட கேஸ்கள் நிலுவையில் உள்ளது.. கொலை வழக்கும் உள்ளது, கொலை முயற்சி வழக்கும் இவர்மீது உள்ளது..

 தனிமரம்

தனிமரம்

இறுதியில் இந்த கள்ளக்காதல் ஜோடி புழல் சிறைக்கு சேர்ந்தே போனது.. இதில், சில மாதங்களுக்கு முன்புதான் விஜயலட்சுமி மட்டும் புழலில் இருந்து வெளியே வந்துள்ளார்.. செல்வமும் இறந்துவிட்ட நிலையில், விஜயலட்சுமியும் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், அந்த 2 குழந்தைகளும் செல்வத்தின் உறவினர்கள் வீடுகளில் வளர்ந்து வருகின்றன.. ஆனால், ஜெயிலில் இருந்து வெளிவந்த விஜயலட்சுமியை சொந்தக்காரர்கள் யாருமே சேர்த்து கொள்ளவில்லை.. பிள்ளைகளையும் அவர்கள் பார்க்க விடவில்லை.. அந்த பிள்ளைகளும் அம்மாவுடன் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்.. இதை விஜயலட்சுமி எதிர்பார்க்கவேயில்லை.. எப்படி இருந்தாலும், குழந்தைகள் நம்மிடம்தான் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.

 தெப்பக்குளம்

தெப்பக்குளம்

இதனால், விஜயலட்சுமி யாருமற்ற நிலையில் தனி மரமானார்.. தங்குவதற்கும் இடதில்லை.. அதனால், பார்த்தசாரதி கோவில் அருகே வந்து உட்கார்ந்துள்ளார்.. இங்கேயே கொஞ்ச நாள் தங்கினார்.. இங்கேயே கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.. ஆனாலும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.. கணவன் + கள்ளக்காதல் + கொலை + ஜெயில் + தனிமை என மொத்தமும் சேர்ந்து, மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டார் விஜயலட்சுமி.. ஒருகட்டத்தில் தனக்கு தானே பேசிக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்..

 உளறல் + கேட்

உளறல் + கேட்

அந்த பகுதியிலேயே இரவு நேரங்களிலும் உளறி கொண்டே நடமாடி வந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், அந்த கோயிலின் தெப்பக்குளத்தில் நேற்றிரவு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இந்த தெப்பக்குளத்துக்கு செல்லும் கேட், ரொம்ப சின்னதாக இருக்குமாம்.. இதற்குள் நுழைந்துதான், குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.. இதில், ஒரு உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், உயிரிழந்தது விஜயலட்சுமிதானா? என்பதை அடையாளம் காட்டக்கூட, சொந்தக்காரர்கள் யாரும் வரவில்லையாம்.. உடலை வாங்கவும் முன்வரவில்லை.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

பொதுவாக, சிறைச்சாலை என்பதே, குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் இடமாகும்.. தவறுகளை நினைத்து வருந்தக்கூடிய தளமாகும்... இடமாகும்.. அந்தவகையில் விஜயலட்சுமி தன் தவறை உணர்ந்தாலும், மனசாட்சி அவரை விரட்டி விரட்டி துரத்தி கொண்டே இருந்துள்ளது.. அதைவிட முக்கியமாக, சிறைதண்டனையை விட "புறக்கணிப்பு" என்பது உச்சக்கட்ட தண்டனையாகவே விஜயலட்சுமிக்கு கிடைத்துவிட்டது...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+