Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பீச்சில் "கண்ணாமூச்சி" விளையாடிய மனைவி.. கண்ணை கட்டி கணவனுக்கு கொடுமை.. அந்த ஆள் வேற.. பரபர தீர்ப்பு

கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி கணவனை கொன்றுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீச்சில் துடிதுடித்து உயிரிழந்த கதிரவனின் மரணத்துக்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் வினோதினி.. அனிதா என்று இன்னொரு பெயரும் உண்டு.. இவருக்கு 26 வயதாகிறது.. இவர் அந்தோணி ஜெகன் என்பவரை காதலித்து வந்தார்.. அந்தோணிக்கு 24 வயதாகிறது.

விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி... இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 பேர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது..

 பீச்சில் பகீர்

பீச்சில் பகீர்

எனவே, வினோதினிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.. கடந்த 2018 செப்டம்பர் 12ம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் கதிரவனுடன் திருமணம் நடந்தது... தம்பதி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். ஆனால், வினோதினிக்கும் அந்தோணிக்குமான உறவு அப்போதும் தொடர்ந்தது. கடந்த 2018 அக்டோபர் 12ம் தேதி, புதுமண தம்பதிகள் திருவான்மியூர் பீச்சுக்கு வந்துள்ளனர்..

 பீச்சில் கண்ணாமூச்சி

பீச்சில் கண்ணாமூச்சி

இந்த பீச்சுக்குதான் போக வேண்டும் என்று வினோதினி, கதிரவனை அழைத்து வந்தார்.. புதுபொண்டாட்டி ஆசைப்படுவதால், கதிரவனும் கிளம்பி வந்தார்.. பீச்சில், கண்ணாமூச்சி ஆடலாமா என்று வினோதினி கேட்கவும், அதற்கும் கதிரவன் சரி என்றார்.. கதிரவனுக்கு கண்ணை கட்டிவிட்டார் வினோதினி.. கண்ணாமூச்சி விளையாட்டை ஆரம்பித்தார்.. மனைவியை, கண்ணைக்கட்டிக் கொண்டு தேட துவங்கினார் கதிரவன்.. ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே, அந்தோணியை வரவழைத்திருந்தார் வினோதினி.. கண்ணாமூச்சி ஆட்டத்தில் கதிரவன் மூழ்கி கிடக்க, அந்த நேரம் பார்த்து, அரிவாளால் கதிரவனை சரமாரியாக வெட்டினார் அந்தோணி.

அம்பலம்

அம்பலம்

இதனால் நிலைகுலைந்து கதிரவன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.. உடனே வினோதினி, தன்னுடைய தாலியை கழற்றி அந்தோணியிடம் தந்து, அங்கிருந்து ஓடிவிடும்படி சொல்லி உள்ளார்.. அந்தோணியும் தாலியுடன் தப்பி ஓடிவிட்டார். பிறகு, வினோதினி அலற தொடங்கினார்.. கணவனை வெட்டிவிட்டு, தாலியை யாரோ பறித்து கொண்டு ஓடுவதாக கத்தினார்.. இதனால், பீச்சில் உள்ளவர்கள் ஒன்றுதிரண்டுவிட்டனர்..

 தாலியை கழட்டி..

தாலியை கழட்டி..

உயிருக்கு போராடி கொண்டிருந்த கதிரவனை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், கதிரவன் இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் பீச்சில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், வினோதினியும், அந்தோணியும் பேசிக் கொண்டிருந்ததும், தாலியை கழட்டி கொடுத்ததும் தெரியவந்தது.. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 பேர் மீதும் கொலை மற்றும் கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

ஜட்ஜ்

ஜட்ஜ்

இந்த கேஸ் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி சிசிடிவி பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.. வழக்கை விசாரித்த நீதிபதி வி.தங்கமாரியப்பன், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் வினோதினி மற்றும் அந்தோணி ஜெகன் ஆகியோருக்கு இரு பிரிவுகளிலும் தலா ஒரு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்... ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளார்.

சுத்தியல்

சுத்தியல்

இந்த திருமணத்தில் மகளுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்துதான் அனிதாவின் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளார்.. ஆனால் காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று அனிதாவின் பெற்றோர் கருதியுள்ளனர்... இந்த விஷயம் கதிரவனுக்கும் தெரிந்துள்ளது.. அதனால் பொறுமையாகவே இருந்துள்ளார். திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்குப்பிறகு ஜாலியாக வெளியில் செல்லலாம் என்று அனிதா அழைத்ததும் கதிரவனுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்ததாம்.. இருவரும் திருவான்மியூர் பீச்சுக்கு வந்து தனிமையில் மனம்விட்டுப் பேசியுள்ளனர்... அந்த நிமிடம்கூட எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் கதிரவன் நம்பிக்கையாக இருந்துள்ளார்.. ஆனால், அதற்குள் கதிரவனின் தலையில் சுத்தியலாலும், இரும்பு கம்பிகளாலும் அந்தோணி ஜெகன் தாக்கி அடித்து கொன்றுவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+