ரஜினிகாந்த் வீட்டுக்குள்ளேயே நுழைந்த பிரபலம்.. யார்னு பாருங்க.. ரஜினியே அசந்துபோயிட்டாராம்.. சூப்பர்ல
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் போட்டோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்ததுமே, ரஜினி ரசிகர்களும், விளையாட்டு ரசிகர்களும் திரண்டு சென்று ஆர்வத்துடன் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த்தை பொறுத்தவரை, திறமையான இளைஞர்களை ஊக்குவிப்பவர்.. இளம்வயது சாதனையாளர்கள், மாணவர்கள், பாடகர்கள் என அவரவர் துறையில் சாதனை படைப்பவர்களையும், முன்னேற துடிப்பவர்களையும், நேரடியாகவே அழைத்து பாராட்டு தெரிவிப்பவர்.. மனதார வாழ்த்து சொல்பவர்..

அந்த அளவுக்கு திறமைக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களை உற்சாகப்படுத்துவார். நேரிலும், போனிலும் என இளம் சாதனையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களிடம் வலிய சென்று தன்னுடைய வாழ்த்தை தெரிவிக்கும் பரந்த மனதுடையவர் ரஜினிகாந்த்.
விளையாட்டுத்துறை: அந்தவகையில் விளையாட்டு துறையிலும் அவர் விட்டுவைக்கவில்லை.. 4 நாட்களுக்கு முன்பு, கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்கிற்கு போன் செய்து வாழ்த்து சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்... காரணம், இப்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில், அதிரடியான பேட்டிங்கால் 5 சிக்சர்களை பறக்கவிட்டு, ஐபிஎல் வரலாற்றிலேயே புதிய சாதனையை படைத்திருந்தார், கொல்கத்தா அணி வீரரான ரிங்கு சிங். கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்தும் வைக்கிறார்..

அதாவது, ஆன்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருந்தும், "ரிங்கு சிங்" என்ற ரசிகர்களின் ஆரவாரம் மைதானத்தில் கேட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, தன்னைப்போல யாரும் கடினமான பாதையில் பயணிக்கக்கூடாது என்பதற்காக, கடைநிலையில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்காகவே, தங்கும் வசதியுடன் கூடிய கிரிக்கெட் பயிற்சி விடுதி ஒன்றையும் ரிங்கு சிங் கட்டிவருகிறார் என்பது கூடுதல் தகவலாகும்
அசந்துபோன ரஜினி: இவருடைய பேட்டிங்கை பார்த்துதான் ரஜினிகாந்த் அசந்துபோயிட்டாராம்.. அதனால் அவருக்கு போன் செய்து வாழ்த்து சொன்னதுடன் இல்லாமல், சென்னைக்கு வரும்போது நேரில் சந்திக்கலாம் என்றும் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்.. அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடப்பதால், எப்படியும் அன்றைய தினம் ரஜினியும், ரிங்கு சிங்கும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது..

அதேசமயம், ரஜினி ஷூட்டிங்கிற்காக, மும்பையில் இருப்பதால், இந்த சந்திப்பு சாத்தியமாகுமா என்றும் சந்தேகங்கள் நிலவின. ஆனால், எதிர்பார்த்ததைபோலவே, ரஜினியுடன் அந்த சந்திப்பும் நடந்துள்ளது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய குஷியில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்..
நெகிழ்ச்சி: சென்னையை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். அவரும், வெங்கடேஷ் ஐயரும் ரஜினிகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளனர். இருவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். அவர்கள் இருவரும் ரஜினியை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் தனது கனவு நனவானதாக வெங்கடேஷ் ஐயர் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications
