எடப்பாடி சொல்லித்தான் அண்ணாமலையை விமர்சித்தேனா? நடந்தது இதுதான்.. சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம்!
கூட்டணிக் கட்சியில் இருந்தே ஈபிஎஸ், நிர்வாகிகளை இழுத்தது விமர்சனத்திற்குள்ளான நிலையில் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : "எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மீது நான் குற்றஞ்சாட்டுவதாக கூறுவது தவறு. நான் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த பிறகு தான் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவே நேரம் கேட்டேன்" என சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கூட்டணிக் கட்சியான பாஜகவில் இருந்தே அதிமுக ஆட்களைச் சேர்த்தது அதிமுக - பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியது. போதாக்குறைக்கு அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தும் இருந்தார் சிடிஆர் நிர்மல்குமார்.

கட்சி தாவிய பாஜக நிர்வாகி
தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியி இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அற்பத்தனம் எதுவும் இல்லை. அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள், கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் வியாபாரமாக்கி வரும் தமிழ்நாடு தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம் என அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கூட்டணியில் விரிசல்
பாஜகவில் இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததும், தன்னை காட்டமாக விமர்சித்ததும் அண்ணாமலைக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. "பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்துதான் நீங்கள் பெரிய கட்சி என நிரூபிக்க வேண்டுமா? ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை உண்டு" எனச் சீறி இருந்தார் அண்ணாமலை. இதற்கிடையே பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படங்களை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அண்ணாமலையை விமர்சித்ததால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

பாஜக ஷாக்
பாஜக நிர்வாகிகள் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கடுமையான வார்த்தைகளால் எடப்பாடி பழனிசாமியை சாடினர். அதற்கு பாஜக இரண்டாம் கட்ட தலைவர்களும் பதிலடி கொடுத்தனர். இதற்கிடையே தமிழ்நாடு பாஜக ஐடி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணனும் ராஜினாமா செய்துவிட்டு, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். பாஜகவில் இருந்து நிர்வாகிகளை இழுத்து எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்தது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விலகிய பிறகுதான் நேரம் கேட்டேன்
இந்நிலையில், பாஜகவில் இருந்து வெளியேறியது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிடிஆர் நிர்மல் குமார், "பாஜகவில் இருந்து வெளியேறியது, நான் நன்கு சிந்தித்து எடுத்த தன்னிச்சையான முடிவு. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றஞ்சாட்டுவதாக கூறுவது தவறு. நான் ராஜினாமா செய்த பிறகு தான் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவே நேரம் கேட்டேன்.

ஆடியோ கலாச்சாரம் தவறானது
பாஜகவில் நிலவும் ஆடியோ, வீடியோ கலாச்சாரம் தவறான அணுகுமுறை. இதுபற்றி நான் கட்சியில் இருந்தபோது நடந்த பல்வேறு கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கிறேன். பாஜக, அதிமுகவை ஆட்டுவிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டு அதிமுகவில் இணைந்து இருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications