MLAக்களை புதுச்சேரியில் விட்டுவிட்டு டெல்லி கிளம்பிய சி.வி.சண்முகம்.. துணை ஜனாதிபதியை சந்திக்கிறார்
சென்னை: டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று இரவு 8 மணிக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து கடிதத்தை வழங்குகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. மேலும், காங்கிரஸுடனான கூட்டணி ஆதரவைப் பெற்ற தவெக 112 எனும் எண்ணிக்கையுடன் தற்போது இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மை பெற்ற பின்பே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இன்று மீண்டும் தவெக தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், "தவெக தலைவர் விஜய், இன்று காலை தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், தவெக ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை என விளக்கினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி அருகே நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிவி சண்முகம் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது பெரும் கவனம் பெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காததால், ஒருவேளை குதிரை பேரம் நடைபெறுமோ என்ற அச்சத்திலேயே, அதை தவிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, எம்எல்ஏ-க்களை புதுச்சேரியில் தங்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் புதுச்சேரி சென்றுள்ளார்.
இந்தச் பரபரப்பான சூழலில், அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகம், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வெங்கடேசன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் நிரஞ்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் விஜய் விக்ரம் உள்பட 21 பேர் போட்டியிட்டனர். அங்கு மொத்தம் 89.64 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் 82 ஆயிரத்து 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் நிரஞ்சன் 52 ஆயிரத்து 312 வாக்குகள் பெற்று 2-வது இடமும், தேமுதிக வெங்கடேசன் 46 ஆயிரத்து 267, நாதக விஜய் விக்ரம் 4,386 வாக்குகளும் பெற்றனர்.
இந்த நிலையில், மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்யசபா எம்.பியாக பதவி ஏற்றிருந்தார் சிவி சண்முகம்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?










Click it and Unblock the Notifications