அச்சு அசலா அப்படியே இருக்கும்.. ஆனா நம்பாதீங்க.. சைபர் மோசடியில் AIஐ இறக்கும் கிரிமினல்கள்! வார்னிங்
சென்னை: சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ மூலம் நடக்கும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி சைபர் க்ரைம் போலீசார் வார்னிங் கொடுத்துள்ளனர்.
இந்த நவீன காலத்தில் ஏஐ தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு காலத்திலும் உலகில் ஒவ்வொரு தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ச்சியைக் காணும். இதற்கு நாம் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

கணினி, மொபைல் என ஒவ்வொரு காலத்திலும் வந்த தொழில்நுட்பங்கள் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. அதன்படி இப்போது ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
ஏஐ தொழில்நுட்பம்: அதிலும் சாட்ஜிபிடியின் வருகை இதை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது. நாம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் வலிமையான ஒரு ஏஐ கருவியாக இது இருந்தது. நாம் எந்தவொரு கேள்வியைக் கேட்டாலும் அதற்கு உடனடியாக பதிலை சொல்லும்.. கதை, கவிதை என அனைத்தையும் சொல்லும். இந்த சாட் ஜிபிடியின் வெற்றி என்பது மற்ற ஏஐ கருவிகளுக்கு மிகப் பெரிய பூஸ்டாக இருந்தது.
அதைத் தொடர்ந்து பல்வேறு புதிய ஏஐ கருவிகள் இங்கே பயன்பாட்டிற்கு வந்தது. அவை நமக்கு மிகப் பெரியளவில் உதவின. அதேநேரம் இந்த ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகளும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இப்படிதான் ஏஐ மூலம் போலியான கால்களை செய்து மக்களிடையே ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "டீப்பேக் (Deep fake) தொழில்நுட்பம், உண்மையான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்களைப் போன்று போலியான ஆடியோ, வீடியோ அல்லது புகைப்படங்கள் உருவாக்க உபயோகிக்கப்படுவதால் பல்வேறு வகையான மோசடிகளைச் செய்வதற்கு வழி வகுக்கிறது.
எச்சரிக்கை: ஆரம்பத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக திரைப்படத் தயாரிப்பாளர்களால் தடையின்றி நடிகர்களைக் காட்சிகளில் ஒருங்கிணைக்கவும் அல்லது வரலாற்று நபர்களைப் போல சித்தரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்பம் வளர்ந்தவுடன், குற்றவாளிகள் இந்த சக்தியைத் தவறாகப் பயன்படுத்த முற்படுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ அழைப்பு மோசடியானது அரங்கேறத் தொடங்கி உள்ளது.
மோசடி செய்பவர்கள் முதலில் பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற நம்பகமான நபர்களின் திருடப்பட்ட படங்கள் அல்லது ஆன்லைனில் கிடைக்கும் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அவர்களைப் போல் ஒரு போலிக் கணக்கை உருவாக்குகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு மூலம் டீப் பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் யதார்த்தமான வீடியோ அழைப்புகளை சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் அல்லது பிற ஆன்லைன் தளங்களில் உருவாக்கிப் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது சக ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்து அவர்களை ஏமாற்றுகிறார்கள். பின்னர், பாதிக்கப்பட்டவரிடம் அவசர உணர்வை உண்டாக்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புமாறு கூறுகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்: ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் தோற்றத்தையும் நடத்தையையும் பிரதிபலிக்கும் வகையில் டீப்பேக் தொழில் நுட்பத்தால் கவனமாக வடிவமைக்கப்படுகிறது. வீடியோவை கையாளுதலுடன் கூடுதலாக, மோசடி செய்பவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட குரல் தொகுப்பைப் பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட நபரின் குரலைப் பிரதிபலிக்கிறார்" என்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது.
மேலும், தெரியாத எண்களில் இருந்து வீடியோ கால் வந்தால் அதை ஏற்கக் கூடாது என்று எச்சரித்துள்ள போலீசார், இது குறித்து 1930 என்ற எண்ணிலும் www.cybercrime.gov.in என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications