நடிகைகளை மிஞ்சிட்டாங்க.. கண்ணே கூசுது.. வீடியோகால் "கோலம்".. இவங்ககிட்ட "ஜாக்கிரதை".. போலீஸ் வார்னிங்

சைபர் கிரைம் போலீஸ் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில்நுட்பங்கள் பெருக பெருக, அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டதை மறுக்க முடியாது.. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், புது எச்சரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.

செல்போனில் போட்டோ, வீடியோக்களை எடுத்துவிட்டு, அதனை அழித்துவிட்டால் எதுவும் தெரியாது என்று நினைத்துக் கொள்கிறார்கள்..

ஆனால், இன்றைய இளம் பெண்கள் பலர் தங்களை எப்படியெல்லாம் படம் பிடிக்க கூடாதோ அப்படி எல்லாம் படம் பிடித்தும் வீடியோக்களை பதிவு செய்தும் ரசித்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கிறார்கள் போலீசார்.. குறிப்பாக சினிமா கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் வகையில் தங்களை விதவிதமாக வீடியோவில் பதிவு செய்து வருகிறார்களாம்.

 வெப்சைட்கள்

வெப்சைட்கள்

ஏற்கனவே, நாம் தேடி செல்லாமலேயே வெப்சைட்கள் மூலம் ஏராளமான ஆபாச வீடியோக்களை கிடக்கின்றன.. அதிலும், கணவன்- மனைவியின் அந்தரங்க விஷயங்களும் வீடியோக்களாகவே கொட்டிக்கிடக்கின்றன.. இளைய சமூகம் கெட்டுப் போவதற்கு இதுபோன்ற ஆபாச இணையதளங்கள் பெருமளவில் பெருகி கிடக்கின்றன. இது தொடர்பாக கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஆபாச வெப்சைட்களை மத்திய-மாநில அரசுகள் முடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

 சைபர் கிரைம்

சைபர் கிரைம்

இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு 800 ஆபாச வெட்சைட்களும், கடந்த ஆண்டு 60 வெப்சைட்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை என்பது மிகவும் குறைவுதான்.. உலகம் முழுவதிலும் இருந்து இயக்கப்படும் ஆபாச வெப்சைட்களில் கோடிக்கணக்கான வீடியோக்கள் உள்ளன.. இது போன்ற வெப்சைட்களை முடக்கி வைப்பது என்பது நாடு முழுவதுமே சைபர் கிரைம் போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருக்கிறதாம்.. ஒரு வெப்சைட்சை முடக்கினால் புதிதாக நூறு வெப்சைட்கள் முளைக்கின்றன..

 ஆபாச வெப்சைட்

ஆபாச வெப்சைட்

எனவே, இதுபோன்ற வெப்சைட்களை முற்றிலுமாக முடக்க முடியுமா? என்பதே பெரிய கேள்வியாகவே எழுந்துள்ளது. எனினும், எந்த காரணம் கொண்டும் கவர்ச்சிகரமாகவோ ஆபாசமாகவோ இளம் பெண்கள் வீடியோக்களை பதிவு செய்யக் கூடாது என்பது போலீசாரின் தொடர் அறிவுரையாகவே இருந்து வருகிறது. தொழில் ரீதியாக தயாரிக்கப்படும் ஆபாச வீடியோக்களுடன் குடும்ப பெண்கள் இருக்கும் ஆபாச வீடியோக்களும் போட்டி போட்டுக் கொண்டு அப்லோடு செய்யப்படுகின்றன..

 சிதறிய ஆபாசம்

சிதறிய ஆபாசம்

இது தொடர்பாக சைபர் கிரைம் உயர்அதிகாரி ஒருவர் சொன்னபோது, "பெரும்பாலும் யூடியூப் சேனல்கள் வழியாகவே இளம் பெண்கள் தங்களை சினிமா ஹீரோயினாக நினைத்துக் கொண்டு, பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்... அதே நேரத்தில் தாங்கள் மட்டுமே பார்த்து ரசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பல பெண்கள் எடுத்த அருவருக்கத்தக்க வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் சிதறி கிடக்கின்றன.. இந்த வீடியோக்கள் எப்படி பரவுகிறது என்று பார்த்தால் அவர்களே அதற்கு காரணமாக இருந்திருப்பார்கள்.

 ஆபாச வீடியோக்கள்

ஆபாச வீடியோக்கள்

செல்போன்கள் ரிப்பேர் ஆகிவிட்டால், ஆபாச வீடியோக்களை எல்லாம் அதிலிருந்து டெலிட் செய்து விட்டு, அதறகு பிறகு ரிப்பேர் செய்ய கடைகளில் தருவார்கள்.. ஆனால், பல கடைக்காரர்கள், ரெக்கவரி சாப்ட்வேர் போட்டு அதில் உள்ள ரகசியங்களை தெரிந்து கொள்வதிலேயே அதிக ஆர்வமாக இருப்பார்கள்.. அப்படி ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் வெளியாகும் ஆபாச வீடியோக்கள்தான், இன்று அதிகமாக சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்து கிடக்கின்றன.. அதனால், செல்போன் பழுதானால் அதனை தூக்கி வீசி எறிந்து விட்டு, வேறு செல்போன்களை மாற்றி விடுவது நல்லது.. இல்லாவிட்டால், ஆபாச மற்றும் அருவெறுப்பு வீடியோக்களை செல்போன்களில் பதிவு செய்யாமல் இருப்பது நல்லது என்கிறார்.

 ஹலோ ஹலோ

ஹலோ ஹலோ

கடந்த 2 மாதத்துக்கு முன்பு, ஆன்லைன் மோசடி சம்பவம் ஒன்றை சொல்லி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருந்தார்கள்... "நடுத்தர வயதை தொட்ட அந்த நபருக்கு, இளம்பெண் ஒருவர் போன் செய்துள்ளார்.. அந்த பெண் யாரென்றே அவருக்கு தெரியாது.. ஹலோ... என்று பேச தொடங்கி உள்ளார்.. அடுத்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எந்த ஊர்? என்று கேட்டு பேசிக்கொண்டிருக்கும்போதே, திடீரென அந்தபெண், வாட்ஸ் அப் வீடியோ காலில் "வாங்க என்ஜாய் பண்ணலாம்" என்றாராம்.. உடனே இந்த நபருக்கும் சபலம் துளிர்த்துவிட, உடனே வீடியோ கால் செய்துள்ளார்.. அங்கே பார்த்தால், அந்த பெண், உடம்பில் ஒட்டுத்துணிகூட இல்லால் நின்றுகொண்டிருந்தாராம்..

பிறந்தமேனி

பிறந்தமேனி

இதை பார்த்ததும் அந்த நபருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.. ஆனால் ஆசை யாரை விட்டது? அடுத்த செகண்டே இந்த நபரும் பிறந்த மேனிக்கு சென்றுள்ளார்.. ஒருசில நிமிடங்கள் கழித்து, செல்போன் திடீரென கட் ஆகிவிட்டது.. லைன் கட் ஆகிவிட்டதால் மறுபடியும் போன் வரும் என்று சார் காத்திருந்தார்.. ஆனால், அடுத்த நிமிடமே, அவரது போனுக்கு, அவரது பிறந்த மேனி போட்டோக்கள் வந்து விழுந்திருக்கிறது.. அதை பார்த்ததும் ஆடிப்போய்விட்டார்.. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே, போன் வந்துவிட்டது.. "செல்போனில் வீடியோ காலில் நீ அந்த பெண்ணை ரசித்ததை படமாக்கி வைத்துள்ளோம்... நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் உன் மானம் போய் விடும்" என்று மிரட்டி உள்ளனர்.

 சபலிஸ்ட்

சபலிஸ்ட்

அந்த மிரட்டல் குரலால் மிரண்டு போன, இந்த சபலிஸ்ட், பல லட்சங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டாராம்.. இது ஒரு உதாரணம்தான், இப்படி ஒவ்வொரு நாளும் செக்ஸ் மோசடி கும்பல் பலரையும் தங்களது வலையில் வீழ்த்தி பணம் பறித்துக்கொண்டேதான் இருக்கிறது.. மானம் போய்விடும் என்பதால் பலர் வெளியே சொல்வதில்லை.. இதைதான் அந்த கும்பலும் ஆயுதமாக கையில் எடுக்கிறார்கள்.. அதனால், இதுபோன்ற மோசடி நபர்களிடம் சிக்காமல் இருக்க மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.

 வடமாநில பெண்கள்

வடமாநில பெண்கள்

இதுபோன்ற கும்பல்கள், முதலில் ஆசையை தூண்டிவிட்டுதான், பணம் பறிக்கும் மோசடியில் இறங்குவார்கள்.. வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ, குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்கள். பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் உள்ள போன் நம்பரை எடுத்து தொடர்பு கொள்ளவும் செய்வார்கள்.. சென்னையில் மட்டும் நாள்தோறும் இந்த மோசடி வலையில் ஏகப்பட்ட பேர் சிக்குகிறார்கள்.. கடந்த ஆண்டு, நூற்றுக்கணக்கானோர் இப்படி சபலத்தால் விழுந்து பாதிக்கப்பட்ட நிலைலயில் வெறும் 4 பேர் மட்டுமே தைரியமாக புகார் தந்துள்ளனர்.

 உஷார் உஷார் உஷார்ள

உஷார் உஷார் உஷார்ள

எனவே, அறிமுகம் இல்லாத பெண்களிடம் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று ஏமாற வேண்டாம். பெரும்பாலும் வட மாநில அழகிகளை இதற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், டெல்லி, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்தே இந்த செக்ஸ் மோசடி கும்பல் அதிகமாக கைவரிசை காட்டி வருவதால், இதுபோன்ற மோசடி கும்பலை பிடிப்பது என்பது கடினமான காரியமாகவே இருக்கிறது என்கிறார்கள் சைபர் கிரைம் அதிகாரிகள்.. எனவே செல்போனில் வீடியோ எடுப்பதாகட்டும், அல்லது அறிமுகம் இல்லாதவரின் அழைப்பாகட்டும்... உஷார் உஷார்.. உஷார்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+