அக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் புயல்..வடக்கு நோக்கி நகரும்..வானிலை ஆய்வு மையம்
சென்னை: அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பிக்கும் நிலையில் அனலை தணிக்க புயல் உருவாகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மே 8ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று இணைவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்தது.

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்தது.
சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மரங்கள் விழுந்ததால், சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையானது இன்றும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடதமிழகத்தில் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று தொடங்கி 7ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், திருச்சி, திருவள்ளூர், ஈரோடு, நாமக்கல், மாவட்டங்களில் நேற்று 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது. அதேபோல, கடலூர், திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியசும். நீலகிரி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியசும், சென்னை, திருவள்ளூர், பகுதிகளில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைந்து காணப்பட்டது.

எனினும் வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் உயரக்கூடும். இந்நிலையில், வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மே 8ம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அது வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் காரணமாக தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 7ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். சில நேரங்களில் 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications