சென்னை மெரினாவில் திடீரென வானுயரம் எழுந்த சுழல் காற்று.. கும்மிருட்டில் சுழன்ற மணல்! அலறிய மக்கள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் திடீரென நேற்றைய தினம் திடீரென சுழற் காற்று வீசியதால் மக்கள் ஓட்டம் பிடித்தனர்.
சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் காலையில் உடற்பயிற்சிக்கு செல்வர். அது போல் சில விளையாட்டு பயிற்சிகளையும் அந்த மணல் பரப்பில் மேற்கொள்வர். அது போல் மாலை நேரங்களில் கடற்கரை காற்றை வாங்கவும் இயற்கை அழகை ரசிக்கவும் பலர் வருகை தருவார்கள்.

அதிலும் சனி, ஞாயிறு, காணும் பண்டிகை, விசேஷ தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வரும் மக்களுக்காக பானிபூரி, பஜ்ஜி, போண்டா கடைகள், மீன் கடைகள், மக்காசோளம் கடைகள் என நிறைய திண்பண்டங்கள் விற்பனையகங்கள் உள்ளன.
இங்கு ராட்டினங்கள், குதிரை சவாரி, பலூன் சுடுதல் போன்ற விளையாட்டுகளும் காணப்படுகின்றன. சென்னைக்கு புதிதாக வருவோர் மெரினாவுக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். அழகு ஆபத்து என்பதை போல் இந்த கடலில் அலைகள் எப்போதும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் இங்கு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த தடையையும் மீறி பலர் குளிக்கச் சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இதற்காக போலீஸார் அங்கு ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். அது போல் இரவு நேரத்தில் யாரும் இங்கு தங்குவதற்கு அனுமதி இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அங்கு யாராவது இருந்தால் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி அவர்களை வெளியேற்றுவார்கள்.
இந்த நிலையில் வங்கக் கடலில் புயல் ஏற்பட்டால் மெரினா கடற்கரையில் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கடலில் நேற்று மாலை அங்கு பொழுதுபோக்க சென்றார்கள். அப்போது திடீரென கடலில் இருந்து ஒரு பெரிய சூறாவளி காற்று எழுந்தது. அது கரையை நோக்கி வந்தது.

வானுயரம் வரை அப்படியே சுழன்று சுழன்று மணல் பறந்து வந்தது. இதை பார்த்த பலர் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்த கடைகளுக்கு சிறிய சேதாரங்கள் ஏற்பட்டன. இந்த நிகழ்வு சுமார் 2 வினாடிகள் இருந்தது. இதையடுத்து அப்படியே கடற்கரை சாலையை நோக்கி சென்றுவிட்டது. வெளியே செல்ல செல்ல காற்றின் வேகம் குறைந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது.
இதுகுறித்து அங்கிருந்த கடைக்காரர்கள் கூறுகையில் இது போன்ற சூறாவளி காற்று அடிக்கடி வரும். திறந்த வெளி என்பதால் வரும். சில வினாடிகள் இருந்து விட்டு போய்விடும். நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம் என்பதால் எங்களுக்கு பயமில்லை. புதிதாக பார்ப்போர்தான் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சுழல் காற்றால் யாரும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை பலர் வீடியோ எடுத்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications